Last Updated : 26 Oct, 2024 06:15 AM

 

Published : 26 Oct 2024 06:15 AM
Last Updated : 26 Oct 2024 06:15 AM

ப்ரீமியம்
ரத்தக் கொதிப்பில் இத்தனை வகைகளா? | இதயம் போற்று 05

‘பி.பி.’ குறித்த அடிப்படையான விஷயங்களைப் பார்த்துவருகி றோம். ‘ஒய்ட் கோட்’ ரத்தக் கொதிப்பு தொடர்பாகப் பேசும்போது அதற்கு நேர்மாறாக ஒரு வகை ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று சொன்னோம். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மறைக்கப்பட்ட ரத்தக் கொதிப்பு: ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. விநோதம் என்ன வென்றால், என்னிடம் வரும்போதெல்லாம் அவருக்கு ‘பி.பி.’ சரியாகவே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் ‘பி.பி.’ கூடிவிடும். உடனே பதறிப்போய் அலைபேசியில் என்னை அழைப்பார். “பயப்பட ஒன்றுமில்லை. ரத்தக் கொதிப்பில் இது ஒரு வகை. கொடுத்த மாத்திரை யைச் சாப்பிடுங்கள். சரியாகிவிடும்” என்று சமாதானப்படுத்துவேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x