Published : 19 Oct 2024 06:23 AM
Last Updated : 19 Oct 2024 06:23 AM
இதயத்துக்கு முக்கிய எதிரி ‘மரபணுப் பிறழ்வுகள்’ (Mutations) எனப் பார்த்தோம். இடிமழையின்போது மின்னலை எப்படித் தவிர்க்க முடியாதோ, அப்படி மரபணுப் பிறழ்வை நம்மால் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். அதேவேளை, தவிர்க்க முடிந்த எதிரிகளும் நம் இதயத்துக்கு இருக்கிறார்கள். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
மறைந்து தாக்கும் நோய்! - இதயத்துக்கு எதிரிகள் என்று சொன்னதும் என் நினைவுக்கு முதலில் வருவது ‘ரத்தக் கொதிப்பு’தான். கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு பதிவாகியிருந்த இந்த நோய், இப்போது நம் நாட்டிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆரம்பத்தில் இது நகரவாசிகளிடம்தான் காணப்பட்டது. இப்போது கிராமவாசிகளிடமும் காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT