Published : 19 Oct 2024 06:32 AM
Last Updated : 19 Oct 2024 06:32 AM

ப்ரீமியம்
மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகும் வாழ்க்கை உண்டு!

புற்றுநோய். இந்த ஒற்றைச் சொல் நம் அனைவரது மன உறுதியையும் அமைதியையும் ஒரு நொடியில் உலுக்கிவிடுகிறது. புற்றுநோய், உடலில் ஏதேனும் ஓர் உறுப்பில் உயிரணுக்கள் கட்டுப்பாடற்று வளர்வதால் ஏற்படுகிறது. இந்தக் கட்டுப்பாடற்ற உயி ரணுக்கள் அருகிலுள்ள திசுக்களை ஆக்கிரமித்து அவற்றை அழிப்பதோடு (local spread) ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக (Distal Metastasis) உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவச் செய் வதால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மரணத்தைக்கூட ஏற்படுத்துகிறது.

அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்: புற்றுநோயைப் பற்றி இன்று நாம் பேச வேண்டியதன் அவசியம், சர்வதேச, தேசியப் புற்றுநோய் அமைப்புகள் தந்துள்ள சில அச்சுறுத்தலான தகவல்கள்தான். உலக அளவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள் என்றாலும், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x