Published : 14 Sep 2024 06:20 AM
Last Updated : 14 Sep 2024 06:20 AM
நம் நாட்டில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் சாதாரணம். போக்குவரத்து நெரிசலில் வாகனத்தைச் செலுத்தத் தசை வலிமை மிக அவசியம். குறைவான வேகத்தில் செல்லும் வாகனத்தின் சமநிலையைப் பேண அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டும். வேகமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தைத் திடீரெனக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் வாகன ஓட்டிகளின் தசை வலிமை நன்றாக இருக்க வேண்டும்.
போக்குவரத்தால் ஏற்படும் எதிர்பாராத சூழலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப வாகன ஓட்டிகளிடம் இருந்து உடனடி எதிர்வினை வெளிப்பட வேண்டும். தசை வலிமை குறைவினால் எதிர்வினை ஆற்றும் நேரம் (Reaction Time) அதிகமாகும். இது மிகவும் ஆபத்தானது. வாகனத்தின் எடையைக் கையாள இயலவில்லை என்றால் அது விபத்துகளை விளைவிக்கும். மூட்டு இணைப்பு, தசைகளில் காயங்களை உண்டாக்கும். விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தாண்டிக் காயங்கள் மனித வாழ்வில் உண்டாக்கும் பொருளாதார, சமூகத் தாக்கங்கள் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT