Published : 22 Jun 2024 08:18 AM
Last Updated : 22 Jun 2024 08:18 AM
கர்ப்பக் காலத்தில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் தைராய்டு பரிசோதனையும் அவசியம். தைராய்டு குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதித்து அதற்கான சிகிச்சையைப் பெறுவது நல்லது.
கர்ப்பமான பெண்கள் பாதுகாப்பாகக் குழந்தை பெறவும், தாய் - சேய் ஆரோக்கி யத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதன் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் நம் நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. கருவுற்ற பெண்களுக்குப் பொதுவான உடல் பரிசோதனையுடன் ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள், ரத்த வகை, ரத்தசோகை அளவைக் கண்டறியும் பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு தைராய்டு நோய் களைக் கண்டறியும் பரி சோதனைகள் இன்னும் பரவலாகச் சென்றடையாமல் இருப்பது அறியாமையே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT