Published : 04 May 2024 06:15 AM
Last Updated : 04 May 2024 06:15 AM

ப்ரீமியம்
உணவில் திரவ நைட்ரஜன் சேர்ப்பது ஆபத்து

நம் மக்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும், அதை செல்ஃபி எடுக்க வேண்டும், அதன் பிறகு அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுக் கவனம் பெற வேண்டும் என்கிற எண்ணம் இன்று மேலோங்கிவிட்டது. இவ்வாறான செய்கைகள் உணவுப் பழக்கத்தின் பக்கம் திரும்பும்போது அவை சில நேரம் நம் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதா கின்றன.

சமீப நாள்களில் வாயில் புகைவிட்ட படி உணவுப் பண்டத்தைச் சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதில் பெரும்பாலும் சிக்கியிருப்பவர்கள் குழந்தைகளே. இந்த நிலையில் தமிழகத்தில் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர் கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x