Published : 23 Sep 2023 06:11 AM
Last Updated : 23 Sep 2023 06:11 AM

ப்ரீமியம்
நீரிழிவு நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை

சித்த மருத்துவர் சிவராமன்

உலக அளவில் மக்களை அதிகம் பாதிக்கும் தொற்றா நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், இந்தியா பி - 17 ஆகியவை இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பத்துக் கோடிப் பேருக்கு நீரிழிவு இருப்பதாகவும் 13 கோடிப் பேருக்கு ஆரம்ப நிலை நீரிழிவு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையைவிட 2 கோடி அதிகம். இதில் சுமார் 57 சதவீதத்தினருக்கு ஆரம்ப அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்: ஒருவருக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் அல்லது நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கு அலோபதி மருத்துவம் ஒரு புறம் இருக்க, சித்த மருத்துவம் வழியாகவும் இந்நோயைக் கட்டுப்படுத்த, குணப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x