Last Updated : 01 Jul, 2023 06:05 AM

 

Published : 01 Jul 2023 06:05 AM
Last Updated : 01 Jul 2023 06:05 AM

ப்ரீமியம்
புரோட்டீன் பானங்களை அருந்துவது அவசியமா?

பளு தூக்குபவர்கள், ஜிம் உடற்பயிற்சியாளர்கள், உடல் கட்டழகை மேம்படுத்த விரும்புகிறவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் தசை வளர்ச்சிக்கு உதவும் வகையில் எர்வின் ஜான்சன் எனும் உடல் கட்டமைப்பாளர் (Body builder) பாலில் கலந்து அருந்தும்படி 1950களில் தயாரித்து அளித்த ‘புரோட்டீன் பவுடர்’ எனும் செயற்கை வகை சத்துப் பானம், இன்றைக்கு அனைவரும் அருந்தும் பானமாக மாறிவிட்டது.

இந்தியாவில் இந்த வகைப் பானங்களின் சந்தை விற்பனை மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 3,000 கோடிக்கும் அதிகம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இவற்றின் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இருப்பினும், ஒரு மருத்துவராக ‘புரோட்டீன் பானங்களை அருந்துவது அவசியமா?’ எனும் கேள்வி என்னுள் எழுகிறது. அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முன்பு ‘புரோட்டீன்’ என அழைக்கப்படும் புரதச் சத்தைப் பற்றிச் சற்று புரிந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x