Published : 24 Jun 2023 07:37 AM
Last Updated : 24 Jun 2023 07:37 AM

ப்ரீமியம்
நோய்களுக்கு நோ - 4 | புற்றுநோய்: அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்

அந்தப் பெண்ணுக்கு அப்போது 40 வயது இருந்திருக்கும். பத்து நாள்களுக்கு மேலாக அவருக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. அதற்கு முன்பாக, சுமார் ஒரு மாதமாக அவருக்கு உடல் பலவீனமும் அதீதக் களைப்பும் இருந்துள்ளன. மருத்துவரைச் சந்தித்தால் எங்கே ஊசி போட வேண்டியிருக்குமோ எனப் பயந்து, வீட்டில் இருந்தபடியே பாரசிடமால் மாத்திரைகளை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு வந்திருக்கிறார். காய்ச்சல் குறைந்தபாடில்லை; உடல் பலவீனமும் சரியானபாடில்லை.

இறுதியில் அவரால் படுக்கையிலிருந்துகூட எழ முடியவில்லை. அந்தளவுக்குக் களைப்பு. கணவர் வற்புறுத்தி அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். ரத்தப் பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம் என்பதை உணர்த்தின. கூடுதல் பரிசோதனைகள் ரத்தப் புற்றுநோயை உறுதிப்படுத்தின. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீமோதெரபி சிகிச்சையும் தொடங்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நாள்களுக்குள் அவருடைய வாழ்க்கை முடிவுற்றது. அதற்கான முதன்மைக் காரணம், காலதாமதம். அவருக்கு ஏற்பட்டிருந்த ரத்தப் புற்றுநோய் வகைக்குச் சிகிச்சை உண்டு. அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரைச் சந்தித்திருந்ததால், அவர் இன்று உயிருடன் இருந்திருக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x