Published : 10 May 2023 06:01 AM
Last Updated : 10 May 2023 06:01 AM
எனக்கு ஏன் அடிக்கடி தொண்டைவலி வருகிறது, டிங்கு?
- ஜெ. நகுலன், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.
நோயிலிருந்து பாதுகாக்கும் பணியை தொண்டையில் இருக்கும் டான்சில்கள் செய்கின்றன. வெயிலுக்கு சில்லென்று தண்ணீர், குளிர்பானம், ஐஸ்க்ரீம், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடும்போது, டான்சில்களின் ரத்தக்குழாய்கள் சுருங்கிவிடுகின்றன.
இதனால் டான்சில்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. அதனால் உங்களின் தொண்டையில் டான்சில்கள் வீங்கி, வலிக்க ஆரம்பிடுத்துவிடுகிறது.
எனவே குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாம். குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடாமலும் தொண்டைவலி வந்தால், உங்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கலாம். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள், நகுலன்.
எங்கள் கிருஷ்ணகிரிக்கு எப்போது ரயில் வரும், டிங்கு?
- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
உங்கள் கேள்வியில் உள்ள ஏக்கம் புரிகிறது இனியா. 1896ஆம் ஆண்டிலேயே கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை போடப்பட்டு, 1942 வரை ரயில் சேவை இருந்தது. வருவாய் அதிகம் இல்லை என்கிற காரணத்தால் அந்தச் சேவை தடைபட்டது.
மீண்டும் ரயில் சேவையைக் கொண்டு வருவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பல்வேறு தடைகளால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமலே இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT