Published : 27 Sep 2017 11:15 AM
Last Updated : 27 Sep 2017 11:15 AM
இ
மய மலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை சிவப்பு பாண்டாக்கள். பழுப்பும் சிவப்புமாகக் காணப்படுவதால் இந்தப் பெயர். சைவ உணவுகளைச் சாப்பிடக்கூடியவை. மூங்கில்களை அதிகமாக உண்ணுகின்றன.
மிக நீளமான தடிமனான வால் உண்டு. சிவப்பு பாண்டா 20 - 23 அங்குல நீளம் இருக்கும். வால் 11 – 23 அங்குல நீளம் இருக்கும். 3 முதல் 6 கிலோ எடை இருக்கும். பெரும்பாலான நேரத்தை மரங்களிலேயே செலவிடுகின்றன. பகல் முழுவதும் தூங்குகின்றன. இரவில் இரை தேடிச் செல்கின்றன. 13 மணி நேரம் இரை தேடுவதற்குச் செலவு செய்கின்றன.
முகத்திலும் காதுகளிலும் வெள்ளை நிற முடிகள் இருக்கும். ரக்கூனும் சிவப்பு பாண்டாவும் பெரும்பாலும் ஒரே மாதிரியான முக அமைப்பைக்கொண்டிருக்கின்றன. சிக்கிம் மாநிலத்தின் விலங்காகச் சிவப்பு பாண்டா இருக்கிறது.
சிவப்பு பாண்டா பற்றி இன்னும் சுவாரசியமான தகவல்களைச் சொல்ல வருகிறாள் பொம்மி. கலர்ஃபுல் காட்சியாகக் கண்டு மகிழ QR Code ஸ்கேன் செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT