Published : 21 Dec 2016 08:00 AM
Last Updated : 21 Dec 2016 08:00 AM
வித்தியாசம் என்ன?
மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
விடுகதை
1. மாடு உட்கார்ந்திருக்க, மூக்கணாங்கயிறு மேய்ந்து வருது. அது என்ன?
2. சின்ன சிட்டுக் குருவிக்கு எழுபது சித்தாடை. அது என்ன?
3. உமி போல் பூப்பந்து; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன?
4. மஞ்சள் மாவிளக்காய் மரத்திலே பூத்திருப்பாள். அவள் யார்?
5. எரிந்தால் வருவான்; எங்கே போவான் தெரியாது. அவன் யார்?
6. பறக்கும்; ஆனால் பறந்து செல்லாது. அது என்ன?
7. குண்டுச்சட்டியில் தொண்டை மீன். அது என்ன?
8. காது எனக்கு இல்லை; தத்தி மகிழ்ந்து இறப்பேன். நான் யார்?
9. ஊசி போட்டால் சுற்றிச் சுழன்று பாடும். அது என்ன?
10. எட்டாத உயரத்தில் எண்ணாயிரம் காவலர்கள். அது என்ன?
விடுகதை போட்டவர்: ச. வர்ஷா, 6-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கூடலூர், தஞ்சாவூர்.
நிழல்புதிர்
இந்த விமானத்தின் சரியான நிழல் எது என்பதைக் கண்டுபிடியுங்களேன்
வார்த்தைத் தேடல்: போவோமா ஊர்கோலம்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் வைத்து, அதன் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
1. மாம்பழம் என்றால் நினைவுக்கு வரும் ஊர்
2. மல்லிகைப்பூ மணக்கும் ஊர்
3. இந்த ஊர் அல்வாவைச் சுவைக்க வேண்டும்
4. தலையாட்டி பொம்மை ஆடும் ஊர்
5. இந்த ஊரில் முறுக்கு பிரபலம்
6. பட்டாசு தயாரிக்கும் ஊர்
7. பட்டுப்புடவைக்குப் பெயர்போன ஊர்
8. இந்த ஊர் கடலைமிட்டாயின் சுவையே தனி
9. வெண்ணெய்க்குப் புகழ்பெற்ற ஊர்
10. ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT