Published : 30 Nov 2016 10:02 AM
Last Updated : 30 Nov 2016 10:02 AM

பலே உயிரிகள்!

> ஒராங்ஊத்தன் என்பதற்குக் ‘காட்டு மனிதன்’ என்று அர்த்தம். மலாய், இந்தோனேசிய மொழி வார்த்தைகளான ‘ஒராங்’ என்பதற்கு மனிதன் என்றும் ‘ஊத்தன்’ என்பதற்குக் காடு என்றும் அர்த்தமாம்.

> யாழ் பறவை (Lyre Bird) ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் காடுகளில் உள்ளது. இது லேசர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம், குழந்தைகளின் அழுகை, கேமராவின் க்ளிக் ஓசை போன்றவற்றைக் கேட்டு அதுபோலவே திரும்ப ஒலிக்கும் திறன் பெற்றது.

> அண்டார்டிகா கண்டம் அருகே ரோஸ் என்ற தீவு உள்ளது. இது எரிமலைகளால் உருவான தீவு. இங்கு மட்டும் சுமார் 50 லட்சம் ‘அடெலி’ பென்குவின்கள் உள்ளன. உலகில் ஒரே இடத்தில் மிக எண்ணிக்கையில் விலங்குகள் வசிக்கும் இடம் இதுவே.

> பல பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் பெரிய வட்டமான புள்ளிகளைப் பார்த்திருக்கிறீர்களா? இவை பார்ப்பதற்குப் பெரிய விலங்குகளின் கண்களைப் போலவே இருக்கும் என்பதால் ‘கண் புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன. இதனால், பட்டாம்பூச்சியின் எதிரிகள் அதை ஏதோ ஒரு பெரிய விலங்கு என நினைத்துக்கொள்வதுண்டு.

> பீவர் (Beaver) என்பது நீரில் வாழும் உயிரினம். இது தண்ணீரில் குச்சிகளாலும் சேற்றாலும் கட்டப்பட்ட கவிழ்ந்த கிண்ணத்தைப் போன்ற கூட்டைக் கட்டும். உலகிலேயே மிகப்பெரிய பீவர் கூடு கனடாவில் உள்ளது. 850 மீட்டர் நீளமுள்ள இதைக் கட்ட 25 ஆண்டுகளாயினவாம்.

> கடல் குதிரைகளுக்குப் பற்களும் வயிறும் கிடையாது. இது சிறு இரையை உறிஞ்சி, பிடித்துத் தின்ன வசதியாக, வாய் குமிழ் போல உள்ளது. இந்தக் குமிழ் இரையை விரைவாகத் தள்ளிவிடும்.

- தொகுப்பு: மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x