Published : 16 Nov 2016 11:10 AM
Last Updated : 16 Nov 2016 11:10 AM

நாடுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

> குழந்தை பிறந்தால் ரஷ்யாவில் கேட்கப்படும் முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘குழந்தையின் எடை (பவுண்ட்) எவ்வளவு?’ என்பதுதான்.

> சீனாவில் வெற்றிலையைப் புனிதமாகக் கருதுவார்கள்.


சீன வெற்றிலை

> பிரேசிலில் இரவு உணவு மீந்துபோய்விட்டால், அதை பேக்கிங் செய்து வீட்டு வாசலில் வைத்துவிடுவார்கள். பிச்சைக்காரர்கள் அதை எடுத்துச் சாப்பிட்டுக்கொள்வார்கள். ஏனென்றால், பிரேசிலில் பிச்சைக்காரர்கள் நேரடியாகப் பிச்சையெடுக்கமாட்டார்கள்.

> டென்மார்க் நாட்டில் பொது நூலகம் ஏதாவது ஒன்றில் உறுப்பினரானால், அந்த அடையாள அட்டையைக் காட்டி அந்த நாட்டின் எந்தப் பொது நூலகத்திலிருந்தும் புத்தகம் எடுக்கலாம்.

> போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இரவு 9 மணிக்கு மேல் ஓட்டல்களில் விற்கப்படும் சாப்பாடு பாதி விலைதான்.

> தெரிந்தவர்களைப் பார்த்தால் ‘நலமா’ என்று கேட்போம் அல்லவா? எகிப்தில் ‘உடல் வியர்க்கிறதா?’ என்று கேட்பார்களாம். ஏன் தெரியுமா? உடல் வியர்த்தால் ஆரோக்கியமாக இருப்பதாக எகிப்தியர்கள் கருதுவார்களாம்.

> ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள அலுவலகங்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கட்டாயமாக ஓய்வு அளிக்கப்படுகிறது.

> ஜெர்மனியில் அறுபத்தைந்து வயதானவர்களுக்கு வாகனக் கட்டணம் பாதிதான்.

தகவல் திரட்டியவர்: பி. தினேஷ், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x