Published : 29 Nov 2016 04:56 PM
Last Updated : 29 Nov 2016 04:56 PM
எனக்குக் கதைகள்னா ரொம்ப பிடிக்கும். அதுலையும் சிரிப்பு கதைன்னா கேட்கவே வேணாம். சென்னையில இருக்குற எங்க மாமா எனக்கு ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுத்தாரு. அந்தப் புத்தகத்தோட பேரு ‘சிரிக்க வைக்கும் சின்னச்சின்னக் கதைகள்’. இந்தப் புத்தகத்துல எல்லாக் கதைகளுமே என்னைச் சிரிக்க வைச்சது. அதோட நீதியையும் சொல்லுச்சு.
உதாரணத்துக்கு, ஒரு கதையைச் சொல்றேன் கேளுங்களேன். ஒரு காட்டுல ஒரு குதிரை வேகமா ஓடுது. குதிரை ஓடுறது பார்த்து, புலியும் அது பின்னாலே ஓடுது. குதிரையும் புலியும் ஒடுறதைப் பார்த்து நரியும் ஓடுது. இந்த மூணும் பின்னால ஓடுறதைப் பார்த்துக் கரடியும் பின்னாலேயே ஓடுது. இப்படிக் குரங்கு, ஓநாய்ன்னு ஒவ்வொரு விலங்கும் ஓடுதுங்க. குதிரை ஓடியோடி களைச்சு போன பிறகு, ஓரிடத்துல நிக்குது. அது நின்னவுடனே ஒவ்வொரு விலங்கும் குதிரை பக்கத்துல வந்து நின்னுச்சுங்க. இதைப் பார்த்தவுடனே குதிரைக்கு ஆச்சரியமா போச்சு. ‘ஏன் எல்லாருமே என் பக்கத்துல வந்து நிக்கிறீங்க’ன்னு குதிரை கேட்டுச்சு.
‘ஏதோ ஒரு காரணத்துக்காக ஓடுறேன்’னு நினைச்சு நான் உன் பின்னால ஓடி’வந்தேன்னு புலி சொல்லுச்சு. இப்படி ஒவ்வொரு விலங்கும் அதே காரணத்தைச் சொல்லுச்சுங்க. இதைக் கேட்டதும் குதிரைக்குச் சிரிப்பு தாங்க முடியலை. யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு விஷயத்துக்காக ஒரு செயலைச் செஞ்சா, நீங்களும் அதையே செய்வீங்களான்னு’ குதிரை கேட்டது. எல்லா விலங்குகளும் பதில் சொல்ல முடியாம தலையைத் தொடங்கப் போட்டிடுச்சுங்க.
குதிரை ஏன் வேகமாக ஓடுச்சுன்னுதானே நீங்களும் நினைக்குறீங்க? ‘சிரிக்க வைக்கும் சின்னச் சின்னக் கதைகள்’ புத்தகம் வாங்கிப் படிச்சா உங்களுக்கு அந்த விஷயம் புரியும். இந்தப் புத்தகத்துல இப்படி 27 குட்டிக் கதைகள் இருக்கு. இந்தப் புத்தகத்தை
என்.சீதாமணின்றவரு எழுதியிருக்காரு. பிரண்ட்ஸ்! பாடப் புத்தகத்துக்கு நடுவுல இந்த மாதிரி சிந்தனையைத் தூண்டவும், சிரிக்கவும் வைக்குற கதைகளையும் படிக்கலாமே.
நூலை மதிப்புரை செய்தவர்: எஸ். சாம்சன் விஜய், 5-ம் வகுப்பு,
குழந்தை இயேசு பிரைமரி பள்ளி, மேலப்புதூர், திருச்சி.
உங்களுக்குப் பிடித்த நூல் எது? குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா? |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT