Published : 26 Oct 2016 11:39 AM
Last Updated : 26 Oct 2016 11:39 AM
பட்டாசைக் கண்டுபிடித்தது யார்? சீனர்கள்தான்! கி.பி 960-1279-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில லிங் வம்சத்தினர் பட்டாசுகளைக் கண்டுபிடித்தார்கள். அந்தக் காலத்தில் சீனர்கள் மூங்கில் கம்புகளில் வெடிமருந்தை அடைத்துப் பட்டாசுகளைச் செய்திருக்கிறார்கள். அதாவது, மூங்கில் கம்பின் ஒரு முனையைக் களிமண்ணால் அடைத்துவிடுவார்கள். இன்னொரு பகுதியில் கரித்தூள், வெடிபொருட்களை அழுத்தமாக அடைத்துவைத்து வெடித்திருக்கிறார்கள். இதுதான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பட்டாசு என்று சொல்கிறார்கள்.
அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, வேதியியல் முறைப்படி பட்டாசைச் செய்ய ஆரம்பித்தபோது, மூங்கிலுக்குப் பதிலாகக் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. காகிதக் குப்பையில் வெடிமருந்தைத் திணித்து வெடிக்கிற பழக்கமும் இப்படித்தான் வந்தது. தொழில் நுட்பங்கள் வளரவளர பட்டாசுகளின் வகைகள் பெருகின. பலவித வேதிப் பொருட்களைக் கலந்து விதவிதமான மத்தாப்பு வகைகள் செய்யப்பட்டன. இப்போது இன்னும் புதுவிதமான பட்டாசுகள் வந்துவிட்டன.
இப்போதெல்லாம் வானில் விதவிதமான செயல்பாடுகளையும். வண்ணவண்ண கலவைகளையும் பட்டாசுகள் வெளிப்படுத்துகின்றன அல்லவா? இந்தப் பட்டாசுகளை ஃபேன்சி ரக பட்டாசுகள் என்கிறார்கள். ‘பைரோ டெக்னிக்ஸ்' என்ற ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் இந்த ஃபேன்சி ரக பட்டாசுகளைச் செய்கிறார்கள். இதில் கலக்கப்படும் வேதிபொருட்களின் வீரியத் தன்மையால்தான் விதவிதமாகப் பட்டாசுகள் வெடிக்கின்றன.
சத்தங்களின் பின்னணியில் முழுக்க முழுக்க அறிவியல்தான் ஒளிந்திருக்கிறது!
தகவல் திரட்டியவர்: கே.விஜய், 8-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT