Last Updated : 19 Oct, 2016 11:07 AM

 

Published : 19 Oct 2016 11:07 AM
Last Updated : 19 Oct 2016 11:07 AM

நம்ப முடிகிறதா? - கடலில் மிதக்கிறதா பூமி?

# ‘ஜென்டில்மென் ஒன்லி லேடீஸ் ஃபர்பிடன்’ (ஆண்கள் மட்டுமே, பெண்களுக்குத் தடை) என்ற விதிமுறையின் முதல் எழுத்துகளையே பெயராகக் கொண்டு, ஸ்காட்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுதான் கோல்ஃப்.

# பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே வைத்தியர்கள் சிகிச்சை கட்டணமாகப் பணம் வாங்குவார்கள். நோயாளி இறந்துவிட்டாலோ மருத்துவர்தான் பணம் தர வேண்டும்!

# இரண்டாம் உலகப் போரின்போது பெர்லினில் போடப்பட்ட முதல் குண்டில் ஒரு யானை மட்டுமே உயிரிழந்தது.

# நிஜ உலகத்துக்கும் மேலோகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய சுவர்தான் பூமியின் தரை என நம்பிக்கொண்டிருந்தார்கள் பண்டைய மயன் நாகரிகத்தினர்.

# கடலில் மிதந்துகொண்டிருக்கும் தட்டுதான் பூமி எனக் கருதினார்கள் பண்டைய கிரேக்கர்கள்!

# கடந்த 3500 ஆண்டுகளில் 230 ஆண்டுகள் மட்டுமே உலகம் முழுக்க முழு அமைதி நிலவியிருக்கிறது.

# இருவரிடமும் ஆயுதம் இல்லை என்று உணர்த்துவதற்காகத்தான் புதியவர்களிடம் கை குலுக்கும் பழக்கம் உருவானது.

# சிவில் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை, மற்ற அனைத்துப் போர்களிலும் இறந்த அமெரிக்கர்களைவிட அதிகம்.

# பார்வைக் கோளாறுகளுக்கான கண்ணாடி 700 ஆண்டுகளாக அணியப்பட்டுவருகிறது.

# பண்டைய எகிப்தியர் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘ஃபெலுகா’ என்ற மரப்படகைப் பயன்படுத்தி நைல் நதியைக் கடந்திருக்கிறார்கள்.

தகவல் திரட்டியவர்: ஆர். கீர்த்தனா, 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, தொட்டியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x