Published : 05 Oct 2016 11:19 AM
Last Updated : 05 Oct 2016 11:19 AM

நீங்களே செய்யலாம்: மீனுக்குள்ளே மீன்!

கிளிப்பை வைத்து நிறைய விளையாட்டு விளையாடி இருப்பீர்கள். சில விளையாட்டுப் பொருட்களைக்கூடச் செய்திருப்பீர்கள். மீன் கிளிப்பைச் செய்திருக்கிறீர்களா? அதுவும் வாயைப் பிளக்கும் மீன் கிளிப்பை செய்திருக்கிறீர்களா? செய்து பாருங்களேன்.

தேவையான பொருள்:

1. மர கிளிப்

2. தடித்த காகிதம்

3. கத்தரிக்கோல்

4. பசை

5. வண்ணப் பென்சில்கள்

எப்படிச் செய்வது?

1.முதலில் தடித்த காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அழகாக மீனை வரையுங்கள்.மீனுக்குப் பிடித்த வண்ணத்தைத் தீட்டுங்கள்.

2. வரைந்த மீனைத் தனியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

3. படத்தில் காட்டியது போலத் தனியாக வெட்டி எடுத்த மீனைப் பாதியாக வெட்டுங்கள்.

4. இப்போது கிளிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். பாதியாக வெட்டிய மீனைக் கிளிப்பில் ஒட்டுங்கள். (மேலும் கீழும் சரியாகப் பொருந்துமாறு பார்த்துக் கவனமாக ஒட்ட வேண்டும்)

5. இப்போது மீன் கிளிப் தயார். கிளிப்பை விரல்களால் அழுத்தினால் கிளிப் விரியும்போது ஒட்டப்பட்ட மீன் வாயைத் திறப்பது போல இருக்கும்.

6. இன்னும் இதை வைத்து ஜாலியாக விளையாட விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. குட்டியாக ஒரு மீனை வரைந்து வண்ணம் தீட்டிக்கொள்ளுங்கள். அதைத் தனியாக வெட்டி படத்தில் காட்டியது போல கிளிப்பில் சரியாக ஒட்டுங்கள்.

7. காய்ந்த பிறகு, கிளிப்பை லேசாக அழுத்திப் பாருங்கள். மீன் வாயைப் பிளக்கும். அப்படிப் பிளக்கும்போது பெரிய மீனின் வாயில் குட்டி மீன் உள்ளது போலத் தெரியும் (கிளிப்பை அதிகமாக அழுத்தினால் ஒட்டிய குட்டி மீன் பிய்ந்துவிடும்). இதை உங்கள் நண்பர்களுக்குச் செய்துகாட்டுங்கள். அவர்கள் வியந்து போவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x