Published : 18 May 2016 12:11 PM
Last Updated : 18 May 2016 12:11 PM
பூனையைத் தெரியும்; கரடியைத் தெரியும். பூனைக் கரடியைத் தெரியுமா? அப்படி ஒரு விலங்கை அழைக்கிறார்கள். அது என்ன விலங்கு என்றுதானே நினைக்கிறீர்கள். சிவப்பு பாண்டாவைத்தான்! உருவத்தில் பாண்டாவைவிட சிறியதாக இருக்கும் சிவப்பு பாண்டாவை ‘பூனைக் கரடி’ என்று அழைக்கிறார்கள்! சரி, பாண்டாவைப் பற்றி சுவையான தகவல்களைப் பார்ப்போமா?
# சுமார் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு விலங்கு பாண்டா. சிவப்பு பாண்டாக்கள் அதிகபட்சமாக 13 ஆண்டுகளும், பாண்டாக்கள் சுமார் 26 ஆண்டுகளும் வாழும்.
# பாண்டா குட்டிகள் பிறந்து 18 மாதங்களில் 45 கிலோ எடையை எட்டும். அதன்பின் தனியே வாழத் தயாராகிவிடும்.
# பிறந்த பாண்டா குட்டிகளுக்குக் கண் தெரியாது. பற்களும் கிடையாது. குட்டிகளைத் தாய் மட்டுமே வளர்க்கும். குட்டி பிறந்து ஒரு வாரம் கழித்தே அம்மா பாண்டா சாப்பிடச் செல்லும். அதுவரை குட்டியைத் தனியே விடாது.
# பாண்டாக்களுக்கு மிகவும் பிடித்த உணவு மூங்கில். ஒரு வருடம்வரை பாண்டா குட்டிகள் பால் மட்டுமே குடிக்கும். மூங்கில் சாப்பிடாது.
# பாண்டா பிறக்கும்போது, எலி அளவுக்குத்தான் இருக்கும்.
# பாண்டாக்கள் பலவிதமான சத்தங்களைக் கொடுக்கும். உறுமுவது, ‘கீச்... கீச்...’ என சத்தம் எழுப்ப செய்யும்.
# மூங்கிலைத் தவிர பாண்டாகள் சிறு செடிகள், சிறு உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும்.
# அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் பாண்டாகள் இடம் பெற்றுள்ளன. மாறி வரும் தட்பவெப்பநிலையும் உணவுப் பற்றாக்குறையுமே இதற்குக் காரணம்.
ஏ. ஹரிணி, 7-ம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT