Published : 03 Feb 2016 11:32 AM
Last Updated : 03 Feb 2016 11:32 AM
மனிதர்களுக்கு ஆடு, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகள் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல, பறவைகளில் காகமும் நெருக்கமானது. காகங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?
# காகம் கார்விடே குடும்பத்தைச் சேர்ந்தது.
# காகம் பொதுவாகக் கரிய நிறம் கொண்டது.
# உலகில் இதுவரை 40 வகையான காகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
# தென் அமெரிக்கா மற்றும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளில் காகம் கிடையாது.
# காகக் கூட்டத்தை ஆங்கிலத்தில் ‘மர்டர்’ (Murder) என்றழைக்கிறார்கள்.
# காகத்தின் பிறப்பிடம் ஆசியா.
# காகங்கள் சராசரியாக 20 வயதுவரை வாழ்கின்றன.
# யுத்தம் மற்றும் மரணத்துடன் இணைத்து காகத்தைப் பார்க்கும் பழக்கம் அயர்லாந்து மக்களுக்கு உள்ளது.
# இந்தியாவைப் போலவே ஸ்வீடனில் இறந்தவர்களின் ஆவியாகக் காகத்தைக் கருதுகிறார்கள்.
# டென்மார்க்கில் காகம், பேய் ஓட்டுபவர்களின் பறவையாகப் பார்க்கப்படுகிறது.
# ஆஸ்திரியாவில் காகத்தைத் தந்திரமும் புத்திசாலித்தனமும் நிறைந்த பறவையாக நினைக்கிறார்கள்.
தகவல் திரட்டியவர்: கே. மகேந்திரன், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளிப்பட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT