Published : 18 Jun 2014 04:12 PM
Last Updated : 18 Jun 2014 04:12 PM

நீங்களே செய்யலாம் : அட்டைக் கப்பல்

மழைக்காலத்தில் காகித்தத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுவது உங்களுக்கு பிடிக்கும் அல்லவா? அட்டையில் கப்பல் செய்து விளையாடுவோமா?

தேவையான பொருட்கள்:

தடிமனான அட்டை, பேனா, பசை, கத்தரிக்கோல், பல்குத்தும் குச்சிகள் 3, வெள்ளைக் காகிதம், நூல்.

செய்முறை:

1 கப்பலின் அடிப்பாகத்திற்குத் தேவையான செவ்வக வடிவத் துண்டை அட்டையிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

2 தடிமனான அட்டையில் ஒரே வடிவம் கொண்ட இரண்டு கப்பல்களைப் படமாக வரைந்துகொள்ளவும். பின்னர் அவற்றை வெட்டி எடுக்கவும். படத்தில் காட்டியுள்ளது போல ஒரு கப்பலின் இரு முனைகளையும் வெட்டி தனியே எடுத்துக்கொள்ளவும்.

3 கப்பலின் அடிப்பாகத்திற்காக வெட்டி எடுத்து சதுர வடிவத் துண்டின் மீது வெட்டி எடுத்து முழுக் கப்பலை பசை கொண்டு ஒட்ட வேண்டும். அதன் பின்னர் ஒட்டப்பட்ட கப்பலின் மீது தனித்தனியே வெட்டி எடுத்த கப்பலின் இரு முனைகளையும் இரு பக்கங்களிலும் ஒட்டவும்.

4 பல் குத்தும் குச்சிகளை முனையிலிருந்து மூன்றில் ஒரு பங்கைக் கத்தரித்துக்கொள்ளவும். அவற்றைத் தனியே எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

5 பல் குத்தும் குச்சிகளை ஒட்டப்பட்ட கப்பலில் நடுவே பொருத்த வேண்டும். கத்தரித்த பல் குச்சிகளைக் கப்பலின் முன்புறமும் பின்பிறமும் சிறிது சாய்ந்தாற்போல் பொருத்தவும்.

6 கப்பலின் பாய்களை உருவாக்க வெள்ளைக் காதிதத்திலிருந்து 5 முக்கோண வடிவங்களைக் கத்திரித்துக்கொள்ளவும். இந்த ஐந்து முக்கோண வடிவப் பாய்களையும் பின்புறம், நடுவில் உள்ள பல் குத்தும் குச்சிகளில் பசை கொண்டு ஒட்டவும்.

7 கடைசியாக, ஒரு சிறிய கொடியைக் கப்பலின் முன்புறம் உள்ள பல் குத்தும் குச்சியில் ஒட்ட வேண்டும். இப்போது அசத்தலான அட்டைக் கப்பல் தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x