Published : 18 Nov 2015 11:57 AM
Last Updated : 18 Nov 2015 11:57 AM
# தக்காளியின் தாயகம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா.
# செடி வகையைச் சேர்ந்த தக்காளிச் செடி 1 முதல் 3 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.
# மணித்தக்காளி, பேத்தக்காளி ஆகிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் இருந்து வந்த தக்காளி வகையை நாட்டுத் தக்காளி அல்லது சீமைத் தக்காளி என்று தமிழில் அழைக்கிறார்கள்.
# உலகிலேயே சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக தக்காளி விளைகிறது.
# தக்காளியில் வைட்டமின் ‘சி’யும் வைட்டமின் ‘கே’வும் மிக அதிகமாக உள்ளன.
# தினமும் தக்காளிப் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. வேக வைத்து சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவது அதிக பலன் தரும்.
தகவல் திரட்டியவர்: மா. அன்பரசி, 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
குறிச்சிபட்டி, மேலூர், மதுரை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT