Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு சின்ன ஊர் காய்கறித் தோட்டப் போட்டிக்காக (Vegetable Festival) ரெடியாகிட்டு இருந்துச்சு. ‘The Curse of the Were-Rabbit’ படம் அப்படித்தான் தொடங்குது. காய்கறித் தோட்டப் போட்டி அப்படின்னா ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து அவுங்க அவுங்க வீட்டுல தோட்டம் போடணும். தோட்டம்னா என்னான்னு தெரியும்தானே? நாம டெய்லி குழம்புக்கு உபயோகிக்கிற கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், இது இல்லாம பூச்செடின்னு எல்லாச் செடியையும் வீட்டிலேயே வளர்க்கலாம். இதைத்தான் தோட்டம்னு சொல்வாங்க. முன்னாடி எல்லாம் இதுமாதிரி தோட்டம் எல்லாருடைய வீட்டுலயும் இருந்துச்சு.
இந்த மாதிரி காய்கறித் தோட்டத்த யார் சிறப்பாக செய் வாங்களோ அவுங்களுக்குப் பரிசு கிடைக்கிறத அந்த ஊர்ல உள்ள கார்ப்பரேசன் அறிவிச்சிருக்கும். அதனால எல்லோரும் பூசணி, கேரட் அப்படினு விதவிதமான செடிகளைத் தோட்டத்தில் வளர்த்து வந்தாங்க. செடிகளும் நல்லா வளர்ந்துச்சு. அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் போட்டியில் ஜெயிக்கணும்னு ஆசை. ஆனால், இதுல ஒரு ஆபத்தும் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த முயல்கள் ஒவ்வொரு தோட்டத்திற்குள்ளும் புகுந்து கேரட், பூசணியை எல்லாம் சாப்பிட்டதுங்க.
இதைத் தடுக்க வால்லஸ் அப்படிங்கிறவர் ஒரு கம்பெனி வச்சு நடத்துறார். அவரு ஒரு சயிண்டிஸ்ட் கூட. புதுசு புதுசா பல பொருட்களைக் கண்டுபிடிக்கிறவர். அவருக்கு ஹெல்ப் பண்ண ஒரு நாய் வச்சி ருக்கிறார். அதோட பேரு குரூமிட். இந்த நாய் அவருக்காக சமையல் பண்ணி வைக்கும். காருக்கு டிரைவிங் செய்யும். அவர் முயல் பிடிக்கப் போகும்போது கூட போய் ஹெல்ப் பண்ணும். இந்த குரூமிட் மற்ற மாதிரி குரைக்காது. சைலண்டா இருக்கும். தன் ஓனர் வால்லஸுக்கு விசுவாசமா இருக்கும்.
யார் தோட்டத்திலயாவது முயல் நுழைஞ்சிடுச்சுன்னு அங்குள்ள வல்லாஸ் வீட்டுல உள்ள அலார்ம் அடிக்கும். உடனே வல்லாஸ், குரூமிட்டோட வந்து அந்த முயலைப் பிடிச்சிட்டு வந்துடுவாரு. இப்படி எல்லாத் தோட்டத்திற்கும் வல்லாஸும் குரூமிட்டும் பாதுகாவலர்களாக இருந்தாங்க. ஊர் மக்கள் எல்லோரும் சந்தோஷமடைஞ்சாங்க. வல்லாஸ், குரூமிட் ரெண்டு பேருக்கும் ஊருக்குள்ள நல்ல பேரு. இருவரும் பிடிச்சிட்டுப் போற முயல்களை எல்லாம் கொல்லுறது கிடையாது. அந்த முயல்களை எல்லாம் அவுங்க வீட்ல அடைச்சு வச்சுடுவாங்க. அதுங்களுக்கு சரியா வேளை வேளைக்கு சாப்பாடும் கொடுப் பாங்க. பிடிக்கிற முயல்களோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வீட்ல முயல்களை வச்சுக்க சிரமமாயிடுச்சு.
அதுக்காக வல்லாஸ் ஒரு ஐடியா பண்றார். டிரை பண்ணி ஒரு மெஷின் கண்டுபிடிக்கிறார். அந்த மெஷினுக்கு முயல்கள போட்டு, அந்த மெஷினையும் அவர் மூளையையும் வயரால இணைக்கிறாரு. இப்படி செய்றதால இவர் மூளைல நினைக்கிறத, அந்த முயல்களோட மூளைக்குள்ள பாஸ் பண்ணலாம்னு நினைக்கிறாரு.
அது மாதிரி ஒருநாள் முயல்களையெல்லாம் அந்த மெஷின்ல போட்டு இவர் மூளைல இணைச்சு கேரட், பூசணி எல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றார். ஒரு முயலைப் பிடிச்சு, கேரட் கொடுத்து செக் பண்ணி பார்த்த, அதுக்குப் பிடிக்கலைன்னு மூஞ்சைத் திருப்பிக்கிச்சு. உங்களுக்குப் பிடிக்காத சாப்பாடை அம்மா கொடுத்தா நீங்க முகத்தை திருப்பிக்குவீங்கள்ள அது மாதிரி திருப்பிக்கிச்சு. வல்லாஸும் சந்தோஷத்தோடு நைட் தூங்கப் போறாரு. விடிஞ்சு பார்த்த அவர் டெஸ்ட் பண்ணி அடைச்சு வச்ச முயல் கூண்டு சுக்குநூறா உடைஞ்சு கிடைக்குது.
ஊர் இருக்கிற தோட்டம் எல்லாம் ஒரு ராட்ஷச மிருகம் வேட்டையாடுன மாதிரி கந்தல் கோலமா கிடக்கு. வல்லாஸ் செஞ்ச டெஸ்ட் ஏதோ கோளாறுல முயல் டைனோசர் மாதிரி வளர்ந்திட்டதா எல்லாரும் நெனைக்கிறாங்க. அந்தப் புதிய மிருகத்தை யாராலயும் பிடிக்க முடியலை. அதப் பிடிக்க முயற்சி பண்ணா, அது எல்லா மெஷினையும் உடைச்சிட்டு தப்பிச்சிடுது. கூண்டை உடைச் சிடுது. வல்லாஸும், குரூமிட்டும் என்னென்ன செய்யுணும்னு தெரியாமா முழிக்கிறாங்க. வல்லாஸைப் பாராட்டிய ஊர் மக்கள் இப்ப பிரச்சினைக்குக் காரணமான வல்லாஸ் மீது கோபம் ஆகுறாங்க.
வல்லாஸும், குரூமிட்டும் ஒருநாள் முயலைப் பிடிக்கப் போறாங்க, ஆனால் பாதி வழியிலேயே வல்லாஸ் காணாமல் போயிடுறார். குரூமிட் மட்டும் தனியா இருக்கும்போது அந்த மிருகம் வந்துடுது. அதோட நிழலை மட்டும் குரூமிட் பாக்கது. அதைத் துரத்திட்டுப் போகுது. கடைசியா பார்த்தா அது வல்லாஸ் ரூமுக்குள்ளதான் போயிடுது. குரூமிட் கதவைத் திறந்து பார்த்து அதிர்ச்சி ஆயிடுது. வல்லாஸ்தான் பிரம்மாண்டமான முயலாக மாறிடுறார். இனி என்ன நடக்கும் என்பதை The Curse of the Were-Rabbit படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT