Published : 18 Nov 2015 11:58 AM
Last Updated : 18 Nov 2015 11:58 AM
உலக அதிசயங்களில் பிரம்மாண்டமான ஒன்று, சீனப் பெருஞ்சுவர். நிலாவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனிதப் படைப்பு இதுதான். காலத்தால் அழிக்க முடியாத சீனப் பெருஞ்சுவர் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?
# பாதுகாப்புக்காகவே சீனப் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் யோசனையின் பேரில் இந்தப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. கி.மு. 220-206-ம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது.
# கிழக்கே ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கேல் லோப்நுர் வரையில் பிரதானச் சுவர், கிளைச் சுவர் என 8,850 கி.மீ. தூரத்துக்குப் பிரமாண்டமாய் நீள்கிறது இந்தச் சுவர்.
# பல மன்னர்களின் ஆட்சியில் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகள் அவ்வப்போதுப் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
# இந்தச் சுவர் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஓ மரத்தையும் கல் போலப் பயன்படுத்திச் சுவர் கட்டியது தொல்பொருள் ஆய்வில் பின்னர் தெரியவந்தது.
# ஓ மரத்தைப் பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1368 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டுள்ளது. மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடத்தில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டது.
தகவல் திரட்டியவர்: ஏ. மணிகண்டன், 9-ம் வகுப்பு,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொதட்டூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT