Published : 09 Sep 2015 12:14 PM
Last Updated : 09 Sep 2015 12:14 PM
அன்புக் குழந்தைகளே, உங்களுக்கெல்லாம் அப்துல் கலாம் தாத்தாவை ரொம்பவும் பிடிக்கும் இல்லையா? அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? உங்களுக்குப் பிடித்த கலாம் தாத்தாவை ஓவியமாகத் தீட்டவும் அவரைப் பற்றி எழுதவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
கலாம் தாத்தாவை உங்களுக்குப் பிடித்த விதத்தில் வரைந்து அனுப்புங்கள். கற்பனை வளம் மிகுந்த சிறந்த 3 ஓவியங்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.
6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி
உங்களுக்குக் கலாம் தாத்தாவை ஏன் பிடிக்கும்? அவர் சொன்னது ஏதாவது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதா? அவர் எழுதியது உங்களுக்குப் பிடிக்குமா? அவரது சாதனை பிடிக்குமா? எது பிடிக்கும்?
‘என் அன்பு கலாம் தாத்தா’ என்னும் தலைப்பில் கலாம் தாத்தாவைப் பற்றி சின்னதாக ஒரு கட்டுரை எழுதுங்கள். அவரை ஏன் உங்களுக்குப் பிடிக்கும் என்று அதில் எழுதுங்கள். 200 வார்த்தைவரையிலும் இருக்கலாம். சிறந்த 3 கட்டுரைகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.
குறிப்பு:
உங்கள் பள்ளியின் பெயர், முகவரி, படிப்பு விவரம், வீட்டு முகவரி, பெற்றோர் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுங்கள். உங்கள் பள்ளி அடையாள அட்டையின் நகலையும் அனுப்புங்கள். தபாலில் அனுப்புவோர் கீழே இருக்கும் முகவரி கூப்பனை வெட்டி உறையின் மேல் ஒட்டி அனுப்ப வேண்டும். இவை இல்லாமல் வரும் படங்கள், கட்டுரைகள் பரிசீலிக்கப்படாது.
படங்கள், கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: செப்டம்பர் 30, 2015.
மின்னஞ்சலில் அனுப்ப: contest@thehindutamil.co.in
பரிசுகளை வழங்குவோர்:
சென்னை மொபைல்ஸ், காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தி இந்து தமிழ் நாளிதழ், 124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT