Published : 09 Sep 2015 12:10 PM
Last Updated : 09 Sep 2015 12:10 PM
குட்டி இரும்புக் குண்டுகளை ஓரிடத்தில் சேர்க்கும் புதிர் விளையாட்டை விளையாடி மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல ஒரு விளையாட்டுப் பொருளைச் செய்து புதிர் விளையாட்டை விளையாடிப் பார்ப்போமா?
தேவையான பொருள்கள்:
பேப்பர் கப் நான்கு, பெரிய செவ்வகப் பெட்டியின் மூடி ஒன்று, கோலிக் குண்டுகள் நான்கு, பசை, கத்தரி, ஸ்கெட்ச் பேனா.
செய்முறை:
1 ஸ்கெட்ச் பேனா உதவியுடன் பேப்பர் கப்புகளில் வண்ணமயமான டிசைன்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். செவ்வக வடிவப் பெட்டியின் மூடியையும் அழகாக நிறமடித்துக்கொள்ளுங்கள்.
2 படத்தில் காட்டியபடி, கப்பின் மேற்புறத்தில் ஒன்றுக்கொன்று எதிராக இரண்டு அரைவட்ட அளவில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அரைக்கோளமானது கோலிக்குண்டு உள்ளே சுலபமாக நுழையும் அளவில் இருக்க வேண்டும்.
3 இப்போது மூடியின் உள்புறத்தில் நான்கு கப்புகளையும் படத்தில் காட்டியுள்ள இடைவெளிகளில் தலைகீழாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
4 இப்போது கோலிக்குண்டுகளை மூடியின் மீது போட்டு அவை கப்புகளில் உள்ளே புகுந்து வெளியே வருமாறு செய்து விளையாடுங்கள். நேரம் போவதே தெரியாமல் விளையாடலாம்.
© Amrita Bharati, 2015
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT