Published : 12 Sep 2015 11:05 AM
Last Updated : 12 Sep 2015 11:05 AM
பழமொழி புதிர்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுக்கு வார்த்தைகள் விடுபட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பழமொழிகளை நிரப்புகிறீர்களா?
1. அஞ்சிலே ---- ஐம்பதிலே வளையுமா?
2. அறிவுடையாரை -------- விரும்புவான்.
3. ஆனைக்கு ஒரு காலம் ------- ஒரு காலம்.
4. இளமையில் ------ முதுமையில் வருத்தம்.
5. உறியிலே --------- இருக்க நெய்க்கு அலைவானேன்.
6. ஒரு கை தட்டினால் ------ எழும்புமா?
7. கடித்த சொல்லினும் ------- சொல்லே நன்மை.
8. கற்றது கைம்மண்ணளவு -------- உலகளவு.
9. குறைகுடம் தளும்பும், ------ தளும்பாது.
10. கெடுவான் ----- நினைப்பான்.
படப் புதிர்
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பல விலங்குகளின் உருவங்கள் குழம்பிக் கிடக்கின்றன. விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
எண் புதிர்
இந்தத் தெருவில் நூறு கட்டிடங்கள் உள்ளன. அவற்றுக்கு ஒன்று முதல் நூறு வரை இலக்கமிட வேண்டும். இலக்கமிட எத்தனை ஒன்பதுகள் தேவைப்படும்?
நிழல் புதிர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பென்சில்களின் நிழல்களைப் பொருத்துங்களேன்.
விடுகதை
1. ஐந்து முகமிருக்கும்; ஆனாலும் உயிர் இல்லை. அது என்ன?
2. சிவப்பு உடம்புக்காரன்; சமையலுக்கு கெட்டிக்காரன். அது என்ன?
3. நான் வாங்கிய முயலுக்கு மூன்றே கால்கள். அது என்ன?
4. வலை விரித்து என்னைப் பிடிக்க முடியாது. வலைதான் எனது வீடே. அது என்ன?
5. பிள்ளையா ருக்கும் பிடிக்கும், பூனைக்கும் பிடிக்கும். அது என்ன?
6. நான்கு கால்களிருக்கும்; நாற்காலி அல்ல. நாள்தோறும் நம்மை சுமக்கும், குதிரையும் அல்ல. அது என்ன?
7. ஒட்டுவதற்குப் பயன்படாத பசை. சுத்தம் செய்ய பயன்படும் பசை. அது என்ன?
8. விதவிதமாய் ஒலித்திடும், கொலுசு ஒலி அல்ல. இதமாய் ஒலிக்கும், தொலைபேசி அழைப்பொலியும் அல்ல. அது என்ன?
9. தடுக்கி விழுந்ததும் எழுவது, வலி அல்ல. அடக்கி வைத்தாலும் பீறிட்டு வருவது, அழுகையும் அல்ல. அது என்ன?
10. கால்களைக் காக்கும் பூ இது. அது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT