Published : 02 Sep 2015 12:19 PM
Last Updated : 02 Sep 2015 12:19 PM
மனிதனும், குதிரையுடன் சேர்ந்து ஒரு உருவமாக இருந்தால் எப்படி இருக்கும்? சென்டார் என்ற உயிரினம் இப்படித்தான் இருக்கும். மனிதனின் முகமும், கைகளும், குதிரையின் உடலையும் கொண்ட கற்பனை உயிர் இது. இதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போமா?
* கிரேக்கப் புராணக்கதைகளில் வரும் ஒரு விலங்கு இது. காலங்காலமாக ஐரோப்பிய ஓவியங்களில் இது இடம்பெற்று வருகிறது.
* சென்டார் விலங்கு முரட்டுத்தனம் கொண்டவை. இவற்றில் சாது குணம் கொண்டவையும் உண்டு.
* சென்டார்களுக்குப் போதை தரக்கூடிய திரவங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். கொஞ்சம் அதிகமாகக் குடித்து மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுமாம். மனிதர்களைக் கண்டால் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளுமாம்.
* சென்டார்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு தனியாக வாழ்பவை.
* கிரேக்கத்தில் தெசாலி என்ற இடத்தில் உள்ள பெலியன் மலைப்பகுதியில் இவை வாழ்வதாகக் கதைகள் உள்ளன.
* சென்டார்களின் தந்தை சென்டாரஸ் என்றழைக்கப்படுகிறது. அப்போலோ கடவுளின் மகன்தான் சென்டாரஸ் என்றும் கருதப்படுகிறது.
* ஹோமரின் கவிதைகளில் சென்டார்கள் இடம் பிடித்துள்ளன.
* கிரேக்கக் கதைகளில் வரும் செய்ரான் என்ற பெயர் கொண்ட சென்டார் மிகவும் படித்த ஞானியாக இருந்திருக்கிறது. இயற்கையில் அமைதியைத் தேடும் சென்டார் இது. மருத்துவம், கலைகள், தத்துவம் மற்றும் நுண்கலைகளில் அறிவும் ஆர்வமும் கொண்ட உயிரினமாகவும் இதைச் சொல்கிறார்கள்.
* ஹெர்குலசின் கதையில் வரும் போலஸ் என்ற சென்டாரும் மிகவும் நல்ல குணம் கொண்டது.
* நவீன கால ஓவியங்களிலும் சென்டார்கள் இடம்பிடித்து வருகின்றன. ஹாரிபாட்டரின் மந்திரக் கதைகளிலும் நார்னியாவின் கதைகளிலும் சென்டார் இடம்பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT