Published : 23 Sep 2015 12:31 PM
Last Updated : 23 Sep 2015 12:31 PM
சின்ன வயசில் இருந்தே சாரணப் படையில் சேர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நிலவில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்டிராங், நோபல் பரிசு பெற்ற பலர் சின்ன வயசில் சாரணப் படையில் இருந்தவர்கள்தான்.
சாரணப் படையில் சேர்ந்தால் கேம் கூட்டிப் போவார்கள். ஒழுங்குமுறைப்படி நடந்துகொள்வது, டென்ட் அடித்துத் தங்குவது, கொடிப் பேரணி, முதலுதவி செய்வது, மேப் ரீடிங் எல்லாம் கற்றுத் தருவார்கள். இதற்கெல்லாம் மேலாகக் கேம் ஃபயர் ரொம்ப ஜாலியா இருக்கும்.
சென்னை அயனாவரம் ரயில்வே காலனி மெட்ரிக் பள்ளியில் சாரண வழிகாட்டி கண்காட்சி சமீபத்தில் நடந்துச்சு. தெற்கு ரயில்வே மாநிலப் பாரதச் சாரணர் பிரிவின் மத்திய மாவட்டமும், வி.பி. ஆவணக் காப்பகமும் இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
சின்ன வயதிலிருந்தே ஸ்கவுட் மீது ஆர்வம் கொண்ட நான், அந்தக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அதுக்குள் நுழைஞ்ச உடனேயே கண்காட்சியை விட்டுப் போகக் கூடாதுன்னு தோனுச்சு. ஏன்னா, அங்க அவ்வளவு விஷயம் இருந்துச்சு.
230 வண்ணமயமான போஸ்டர்கள் மூலம் சாரண அமைப்பின் பெருமைகள்-வரலாறு, சாரணர் படை தொடர்பான புத்தகங்கள், நாணயங்கள், ஸ்டாம்ப் போன்றவையும், சாரண வழிகாட்டிக் கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சாரணர் அணிகலன்கள் எனப்படும் பேட்ஜ், கழுத்துப்பட்டை, தொப்பி, வாகிள் போன்றவை வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வரவழைக்கப்பட்டிருந்தன. அதையெல்லாம் பார்த்தபோது, நானும் இது போன்ற விஷயங்களைச் சேகரிக்கணும்னு ஆர்வம் வந்தது.
சாரண பைபிள் எனப்படும் சாரணத் தந்தை பேடன் பவல் எழுதிய 'ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ்' என்ற புத்தகத்தின் 22 மொழிகளைச் சேர்ந்த மொழிபெயர்ப்புகளைப் பார்த்தேன்.
இதற்கெல்லாம் மேலாக 'பேடன் பவல் ரயில்வே ஸ்டேஷன்' என்ற பெயரில் ஒரு மாதிரி ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு, சாரணக் கொள்கைகளை விளக்கி இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
தமிழகம் முழுவதுமிருந்து சக சாரணப் படை மாணவ, மாணவிகள் வந்திருந்தது புதிய அனுபவமாக இருந்துச்சு. சாரணப் படையின் முதுபெரும் உறுப்பினர்கள் சிலரைச் சந்திச்சு பேசினது மறக்க முடியாத அனுபவம்தான்.
- பி. ஜெரேமியா, 9-ம் வகுப்பு, ஐ.சி.எஃப். வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT