Last Updated : 26 Aug, 2015 12:18 PM

 

Published : 26 Aug 2015 12:18 PM
Last Updated : 26 Aug 2015 12:18 PM

கற்பனை உயிரினம்: குதிரைக்குக் கொம்பு முளைத்தால்...

நெற்றியில் ஒற்றைக்கொம்பு முளைத்த வெள்ளைக் குதிரைகளைக் கார்டூன்கள் அல்லது ஓவியங்களில் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவைத்தான் கொம்புக்குதிரைகள் என்றழழைக்கப்படும் ‘யுனிகார்ன்’. இந்தக் கொம்புக் குதிரையைப் பற்றி பார்ப்போமா?

l சிந்து சமவெளி நாகரீகம் பற்றி பள்ளிப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முத்திரைகளில் இந்தக் கொம்புக்குதிரைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

l பழமையான பிரான்ஸில் வரையப்பட்ட பாறை ஓவியங்களிலும் கொம்புக் குதிரைகள் இடம்பெற்றுள்ளன. பைபிளிலும்கூட வருகின்றன.

l குதிரை போன்ற உருவத்தில் ‘யுனிகார்ன்’ இருந்தாலும், அதன் கால் குளம்பு ஆடுக்கு இருப்பது போல இரண்டாகப் பிளந்திருக்கும்.

l ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் வெள்ளை நிறக் கொம்புக் குதிரைகள் இடம்பிடித்துள்ளன. தேவாலய ஓவியங்கள், சிற்பங்களில் இடம்பெற்றுள்ள சில கொம்புக் குதிரைகளுக்குத் தாடியும் உண்டு.

l ஓவியரும் சிற்பியுமான லியானர்டோ டாவின்சி, கொம்புக் குதிரைகளை முரட்டுத்தனம் உள்ள வன விலங்காக வர்ணித்துள்ளார்.

l வேட்டைக் காரர்களுக்குக் கொம்புக் குதிரை வேண்டுமென்றால் அவர்கள் பெண்களைக் காட்டில் விட வேண்டும். அந்தப் பெண்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கு அருகே பணிவாக வந்து கொம்புக் குதிரைகள் அமர்ந்துகொள்ளுமாம்.

l கொம்புக் குதிரைகளின் கொம்பைக் கொண்டு கலக்கினால் விஷம் கலந்த நீரும் தூய்மையாகி விடும் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்துள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொம்புகளுக்கு இருப்பதாகக் கருதப்பட்டன.

l சீனப்பயணி மார்க்கோபோலோ காண்டாமிருகங்களைப் பார்த்து யுனிகார்ன்கள் என்று தவறாகக் கருதினாராம். அது மட்டுமல்ல கதைகளில் சொல்லப்பட்டது போல அவை அழகாக இல்லை என்றும் குறைபட்டுள்ளார்.

l மாமன்னன் செங்கிஸ்கான் இந்தியாவை வெல்ல முயன்றபோது ஒரு கொம்புக் குதிரையைப் பார்த்ததாகக் கதை ஒன்று உள்ளது. அந்தக் குதிரை செங்கிஸ்கானைப் பார்த்துத் தலைகுனிந்து அடிபணிந்ததாம். அந்தக் குதிரையை இறந்துபோன தனது தந்தை என்று கருதினார் செங்கிஸ்கான். அதன் கட்டளைக்குப் பணிந்து இந்தியாவை வெல்ல வேண்டும் என்ற நினைப்பைக் கைவிட்டதாக அந்தக் கதை போகிறது.

l ஐரோப்பா முழுவதும் ஆயுதங்கள், கேடயங்களில் கொம்புக் குதிரையின் உருவம் போர்த்தளபதிகள் மற்றும் வீரர்களின் அந்தஸ்தைக் குறிக்கும் விதமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

l ஸ்காட்லாந்து ராணுவத்தினர் தங்களை வெல்ல முடியாதவர்கள் என்பதை உணர்த்துவதற்காகப் போர்க் கருவிகளில் கொம்புக் குதிரை சின்னத்தைப் பொறித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் பழைய நாணயங்களிலும் இந்தக் குதிரைகள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

l கொம்புக் குதிரை பற்றிய கதைகளில் அவை தாவர உணவைச் சாப்பிடுபவை என்று குறிப்புகள் உள்ளன. ஆற்றில் மட்டுமே தண்ணீர் குடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மரக்கிளைகள், இலைகள், கனிகளைச் சாப்பிடுமாம். தாதுச்சத்தைப் பெருக்கிக் கொள்ளக் குகைகள், பாறைகளை நாக்கால் வருடிச் சில சத்துகளை எடுத்துக்கொள்ளுமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x