Last Updated : 05 Aug, 2015 12:17 PM

 

Published : 05 Aug 2015 12:17 PM
Last Updated : 05 Aug 2015 12:17 PM

கற்பனை உயிரினம்: மனிதன் பாதி... விலங்கு மீதி...

எகிப்து பிரமிடுகள் என்றதும் உங்களுக்கு எது ஞாபகத்துக்கு வரும்? பாலைவனம், பிரம்மாண்டமான பிரமிடுகள், சிங்க உடலும், மனிதத் தலையும், பறவையின் சிறகும் கொண்ட சிற்பம் ஆகியவை சட்டென ஞாபகத்துக்கு வரும் இல்லையா? சிங்க உடல், மனிதத் தலை, பறவையின் சிறகுடன் காட்சியளிக்கும் பிரம்மாண்டமான சிற்பத்தின் பெயர் என்ன தெரியுமா? ஸ்பிங்ஸ்!

l ‘ஸ்பிங்ஸ்’ பண்டைய எகிப்து புராணங்களில் இடம்பெற்ற ஒரு கற்பனை விலங்கு. எகிப்தில் வழிபாட்டுதலங்களிலும், அரசர்களைப் புதைக்கும் சமாதிகளிலும் இந்த ஸ்பிங்ஸ் சிற்பங்களை காவல் தெய்வங்களாகப் படைத்தார்கள். இந்துக் கோவில்களில் காணப்படும் துவாரபாலகர்களைப் போன்றது ‘ஸ்பிங்ஸ்’.

l ஸ்பிங்ஸ் மூன்று வகைகளில் உள்ளன. சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்டவை ‘அண்ட்ரோ ஸ்பிங்ஸ்’. சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டவை ‘கிரியோ ஸ்பிங்ஸ்’. சிங்க உடலும் வல்லூறுப் பறவையின் தலையும் கொண்டவை ‘ஹையராகோ ஸ்பிங்ஸ்’.

l ஸ்பிங்ஸ் சிற்பத்திலேயே பெரியதும் புகழ்பெற்றதும் எகிப்தில் கீஸாவில் உள்ளது. இது நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சிற்பமாகும். இந்த சிற்பத்தில் உள்ள முகம் எகிப்தில் ஆட்சி செய்த காப்ராவுடையது என்று நம்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்பிங்ஸ் சிற்பம் எகிப்தின் தேசியச் சின்னமும்கூட. எகிப்து நாட்டு தபால் தலைகள், நாணங்களிலும் இந்த உருவம் பதிக்கப்பட்டுள்ளது.

l ஸ்பிங்ஸ் சிற்பத்திலேயே பெரியதும் புகழ்பெற்றதும் எகிப்தில் கீஸாவில் உள்ளது. இது நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சிற்பமாகும். இந்த சிற்பத்தில் உள்ள முகம் எகிப்தில் ஆட்சி செய்த காப்ராவுடையது என்று நம்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்பிங்ஸ் சிற்பம் எகிப்தின் தேசியச் சின்னமும்கூட. எகிப்து நாட்டு தபால் தலைகள், நாணங்களிலும் இந்த உருவம் பதிக்கப்பட்டுள்ளது.

l கிரேக்க நகரமான தீப்ஸை காக்கும் விலங்குகளாக ஸ்பிங்ஸ் புராணக் காலத்தில் இருந்துள்ளது. பண்டைய தீப்ஸ் நகருக்குள் நுழைய விரும்பும் ஒவ்வொரு பயணியும் ஸ்பிங்ஸ் சொல்லும் புதிருக்கு விடையளிக்க வேண்டும். பதிலை சரியாகச் சொன்னால் ஊருக்குள் போகலாம். பதில் சொல்லாவிட்டால் பயணியை ஸ்பிங்ஸ் கொன்றுவிடுமாம்.

l நான்கு கால்களில் பிறந்து, இரண்டு காலுடையதாக வளர்ந்து, பின்னர் மூன்று கால்களுடையதாக மாறும் உயிர் எது என்று விடுகதை ஒன்றை ஸ்பிங்ஸ் போட்டதாக ஒரு கதை உண்டு. புராண காலத்து மன்னரான ஈடிபஸ் தான் இந்த விடுகதைக்கு விடையைக் கண்டுபிடித்தான்.

l அந்த விடை என்ன தெரியுமா? மனிதன். மனிதன்தான் பிறக்கும் போது குழந்தையாக கைகளையும் கால்களாக்கித் தவழ்கிறது. வளர்ந்தபிறகு நிமிர்ந்து இரண்டுகால்களில் நடக்கிறான். முதுமையில் கம்பூன்றி மூன்று கால்களில் நடக்கிறான்.

l எகிப்தில் மட்டுமல்ல கிரேக்கத்திலும்கூட ஸ்பிங்ஸ் பரவியிருக்கிறது. பண்டையக் கிரேக்கத்தில் ஸ்பிங்ஸ் சிற்பங்கள் நிறைய உருவாக்கப்பட்டன.

l மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில்கூட உள்ளன. இங்குள்ள ஆலயங்கள், தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் இந்த உயிரினம் காணப்படுகிறது.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x