Published : 17 Jun 2015 12:11 PM
Last Updated : 17 Jun 2015 12:11 PM
துள்ளி ஓடும் புள்ளி மானின்
அழகைக் கண்டு ரசிக்கலாம் - அதை
தள்ளி நின்று பார்த்து தினமும்
மகிழ்ச்சி பொங்க வசிக்கலாம்
மானின் இனம் ஒன்று கூடி
வனத்தில் வசித்து வருகுதே - தன்
மருளும் விழி பார்வை தன்னில்
ஆற்றின் நீரைப் பருகுதே
நீண்ட கால்கள் குட்டை வாலு
மானின் அழகு கூடுது - தினம்
நெடிய தூரம் அலைந்து திரிந்து
தனது உணவைத் தேடுது
கிளைகள் போல தலையில் கொம்பு
காண மனம் தூண்டுமே - சிறு
குறையும் இன்றி மான் இனத்தை
நாமும் காக்க வேண்டுமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT