Published : 24 Jun 2015 12:46 PM
Last Updated : 24 Jun 2015 12:46 PM
மூக்குக் கண்ணாடி கீழே விழாமல் இருப்பதற்காக சிலர் சங்கிலியைக் கோத்து கழுத்தில் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் போடுவதற்கு நூலாலான அழகிய பின்னல் ஒன்றைச் செய்வோமா?
தேவையான பொருள்கள்:
பச்சை, ஆரஞ்சு, ஊதா ஆகிய நிறங்களிலான நூல்கண்டுகள்.
செய்முறை:
1 மூன்று நூல் கண்டுகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றின் முனையிலும் படத்தில் காட்டியுள்ளபடி ஐந்து செ.மீ. இடம் விட்டு மூன்றையும் ஒன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள்.
2 இப்போது மூன்று நூல்கண்டுகளையும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பின்னிக்கொள்ளுங்கள்.
3 தேவையான நீளத்துக்குப் பின்னிக்கொண்டு இறுதிப் பின்னலை அடுத்து ஐந்து செ.மீ. இடம்விட்டு பின்னலை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
4 இப்போது மூக்குக் கண்ணாடியின் இரு முனைகளிலும் இந்தப் பின்னலின் இரு முனைகளையும் கட்டிக்கொள்ளுங்கள்.
5 உங்கள் பிரியத்துக்குரிய தாத்தாவுக்கோ பாட்டிக்கோ இதை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் கண்ணாடியில் இந்தப் பின்னலைப் பிரியத்துடன் கட்டிக்கொள்வார்கள் இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT