Published : 20 May 2015 12:28 PM
Last Updated : 20 May 2015 12:28 PM
விதவிதமாக விளையாட்டுப் பொருட்கள் செய்வது என்றால் உங்களுக்குப் பிடிக்குமா? வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முதலை செய்யலாம் தெரியுமா? செய்து பார்க்க நீங்கள் தயாரா?
தேவையான பொருட்கள்:
கிளிப், சிறிய துண்டு பச்சைக் காகிதம், மணிகள், பச்சை பெயிண்ட், கத்தரிக்கோல், பசை.
செய்முறை:
1. கிளிப்பில் பச்சை பெயிண்ட் அடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை நன்றாகக் காய வையுங்கள்.
2. சிறு துண்டு பச்சைக் காகிதத்தை எடுத்து 1 செ.மீ. நீளம், 20 செ.மீ. அகலத்துக்கு வெட்டிக்கொள்ளுங்கள், அதைப் படத்தில் காட்டியபடி மேலும் கீழுமாக மடியுங்கள்.
3. இந்தக் காகிதத்தைக் கிளிப்புடன் சேர்த்து ஒட்டிக்கொள்ளுங்கள். இதுதான் முதலையின் உடல் பகுதி.
4. முதலையின் கண்களாக மணிகளை ஒட்டிக்கொள்ளுங்கள்.
5. இப்போது பச்சை பெயிண்ட் அடித்த காகிதத்தை 2 X 4 செ.மீ. துண்டுகளாக வெட்டி, அதை இரண்டாக மடித்து முதலையின் கால்களாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது முதலை ஒன்று உங்களுக்குக் கிடைத்து விட்டதா? அதை வைத்து நீங்கள் விளையாடலாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT