Published : 16 Apr 2014 02:40 PM
Last Updated : 16 Apr 2014 02:40 PM
விலங்குகளிலேயே பலமான விலங்ககு எதுன்னு கேட்டா, சிங்கம்னு நீங்க உடனே சொல்லிருவீங்க. அதனால நாம சிங்கத்தை ‘காட்டு ராஜா’ன்னு சொல்றோம். ஆனால் நம்ம நாட்டுக்கு இருக்கிற மாதிரி காட்டுக்கு ராஜா, மந்திரி எல்லாம் காட்டுக்கு ஒண்ணும் கிடையாது. ஆனால் பலமான விலங்கு, காட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கும். அது வந்தா மற்ற விலங்குகள் விலகிப் போயிரும். அந்த மாதிரியான விலங்குதான் சிங்கம். சரி, காட்டுல நிறைய சிங்கம் இருக்குமே அதெல்லாமே காட்டு ராஜாவான்னு கேட்கிறீங்களா? கிடையாது. அந்தச் சிங்கங்களிலேயே யார் பலசாலி சிங்கமோ அதுதான் காட்டுக்கு ராஜாவா இருக்கும்.
அந்த மாதிரி ஒரு காட்டு ராஜா The Lion King படத்தில் வருது. அந்தச் சிங்கத்தோட பேரு மூவசா. அதோட மனைவி பேரு சபாரி. அவுங்கதான் காட்டுக்கு ராணி. இவுங்க ரெண்டு பேரும் காட்டை நல்லா பாத்துகிட்டாங்க. காட்டுல உள்ள மற்ற மிருகங்கள் எல்லாம் சந்தோஷமா இருந்தாதுங்க. அப்போ அவுங்களுக்கு ஒரு சிங்கக் குட்டி பொறந்துச்சு. அந்தக் குட்டிக்கு சிம்பான்னு பேர் வச்சாங்க. தனக்குப் பிறகு சிம்பாதான் காட்டைப் பாத்துக்கப் போறவன்னு மூவசா குட்டிய பத்திரமா வளர்த்தது. ஆனால் மூவசா சிங்கத்துக்கு கெட்ட எண்ணம் பிடிச்ச ஒரு தம்பி இருந்துச்சு. அந்த தம்பிச் சிங்கத்தோட பேரு ஸ்கார். ஸ்கார் எப்படியாவது தன் அண்ணனையும் சிம்பாவையும் கொன்னுட்டு தான் காட்டுக்கு ராஜாவாகிடனும்னு நெனச்சது.
சிம்பா எல்லாச் சிங்கக் குட்டிங்களைப் போல பயங்கர சுட்டியா வளர்ந்துச்சு. அப்பா போகக் கூடாதுன்னு சொல்ற இடங்களுக்கெல்லாம் போய் விளையாடும். சிம்பாவின் இந்தச் சுட்டித்தனத்தைப் பயன்படுத்திகிட்டு ஸ்கார் அதை எப்படியாவது கொல்ல நெனச்சுது. ஒரு நாள் சிம்பா ரொம்ப தூரம் ஏமாற்றிக் கூட்டிப் போய் கழுதைப் புலிங்கள விட்டுக் கொல்லப் பார்த்துச்சு. ஆனா அதுக்கு மூவசா வந்து அதைக் காப்பாத்திக் கூட்டுப் போய் அட்வைஸ் பண்ணுச்சு.
இப்படி ஒரு நாள் சிம்பா துடுக்குத்தனமா போய் காட்டு மாடுங்க கூட்டத்துல மாட்டிக்கும். கழுதைப் புலிங்கள விட்டு ஸ்கார் காட்டு மாடுங்களை விரட்டச் சொன்னுச்சு. மாடுங்க எல்லாம் ஓடி வர, சிம்பா சின்னக் குட்டி இல்லையா? அது மாடுங்களோட காலில் மாட்டி சாகப் பார்த்தது. கடைசியா ஒரு மரக் கொப்புல ஏறித் தப்பிக்கப் பார்த்துச்சா, ஆனா மரக் கொப்பு உடைஞ்சு கிழ விழுந்திருச்சு.
விஷயம் கேள்விப்பட்டு மூவசா ஓடி வந்து தன் மகனைக் காப்பத்திடுச்சு. ஆனா பாவம் மூவசா தவறி இறந்து போயிரும். ஸ்காருக்குச் சந்தோஷமா இருக்கும். அது சிம்பாவையும் கொல்றதுக்காக கழுதைப் புலிங்கள அனுப்பும். கழுதைப் புலிகளிடம் தப்பிக்க குட்டியான சிம்பாவுக்குக் கஷ்டமா இருக்கும். ஆனாலும் வேகமாக ஓடும்.
சிம்பா சிங்கக் குட்டித் தப்பித்ததா, யார் காட்டு ராஜாவானர்? என்பதை The Lion King படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT