Last Updated : 04 Feb, 2015 12:44 PM

 

Published : 04 Feb 2015 12:44 PM
Last Updated : 04 Feb 2015 12:44 PM

உயிரிகள் உலகம்: விந்தைப் பூச்சிகள்

# பூரானுக்கு நூறு கால்கள் உண்டு என்று சொன்னாலும்கூட, உண்மையில் அதற்கு நூறு கால்கள் கிடையாது. ஒற்றைப் படை ஜோடியில் அமைந்த கால்களே அவற்றுக்கு இருக்கும். குறைந்தபட்சம் 7 ஜோடிக் கால்கள் இருக்கும்.

# மின்மினிப் பூச்சிகளில் சிறிய மின்மினிப் பூச்சிகளால் ஒளியை உருவாக்க முடியாது. பெண் மின்மினி, ஆண் மின்மினியைக் கவர்வதற்காக ஒளியை உமிழுகிறது.

# வண்ண வெட்டுக்கிளி (பெயிண்டட் கிராஸ்ஹாப்பர்) ஜெயின்ட் மி்ல்க்வீட் எனப்படும் எருக்கம் வகைச் செடியில் இருந்து நஞ்சை சேகரித்துக்கொண்டு, இரைகொல்லிகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுகின்றன.

# வாழைப்பழத்தைப் போலிருக்கும் ஓடற்ற மஞ்சள் நத்தைக்கு ஒற்றை நுரையீரலே உண்டு.

# தலைவெட்டி நத்தை (Decollate snail) எனப்படும் இரைகொல்லி நத்தை வகை, தோட்டத்தில் மேயும் பிற நத்தைகள், ஓடற்ற நத்தைகள், அவற்றின் முட்டைகளைச் சாப்பிட்டுவிடும்.

# ஜப்பானிய ஹார்னெட் ஸ்டிங் எனப்படும் தேனீ, மனிதத் சதை, திசு, எலும்புகளைக் கரைத்து சாப்பிட்டுவிடக் கூடியது.

# சிவப்பு வெல்வெட் மைட் எனப்படும் உண்ணி முதலில் ஒட்டுண்ணியாக மற்ற பூச்சிகளைச் சார்ந்து வாழ ஆரம்பிக்கும், பிறகு அது இரைகொல்லியாக மாறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x