Published : 28 Jan 2015 04:09 PM
Last Updated : 28 Jan 2015 04:09 PM
சின்னஞ்சிறு விலங்குகளில் ஒன்று பிக்மி மூஞ்சுறு (pygmy shrew). கட்டை விரலில் பாதி அளவுக்குத்தான் இது இருக்கும். இவற்றின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 835 தடவை துடிக்கும்.
நீலத் திமிங்கிலத்தின் இதயம் 900 கிலோ வரை இருக்கும். அதாவது ஒரு சிறிய கார் அளவுக்குப் பெரியதாக இருக்கும். பெரிய உயிரினங்களுக்கு மெதுவான இதயத் துடிப்புகளே ஏற்படும். ஒரு நிமிடத்துக்கு 8 முதல் 10 தடவை மட்டுமே துடிக்கும்.
மனிதனின் இதயம் ஐந்து விரல்களை மடக்கிய கை அளவு மட்டுமே இருக்கும். ஒரு நிமிடத்துக்கு 70 தடவை துடிக்கும்.
சுண்டெலியின் இதயம் மிகவும் வேகமாகத் துடிக்கக்கூடியதுதான். நிமிடத்துக்கு 500 தடவை துடிக்கும்.
ஆப்பிரிக்க யானையின் இதயம் 22 கிலோ எடை அளவுக்கு இருக்கும். ஒரு நிமிடத்துக்கு 28 தடவை துடிக்கும்.
உலகிலேயே மிக உயரமானது ஒட்டகச்சிவிங்கி. இதன் தலைக்கும் இதயத்துக்கும் 2 மீட்டர் தூரம் இருக்கும். நிமிடத்துக்கு 170 முறை இதயம் துடிக்கும்.
மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு வேங்கைப்புலி (Cheetah). நிமிடத்துக்கு 120 தடவை துடித்துக்கொண்டிருக்கும் இதன் இதயம், தாவிக் குதிக்கும்போது 250 தடவையாக எகிறிவிடும்.
பறவைகளில் சிறியது ரீங்காரப் பறவை (Hummingbird). இது மிக வேகமாகச் செயல்படக்கூடியது. இதன் இதயம் நிமிடத்துக்கு 1260 தடவை துடியாய்த் துடிக்கும்.
வேகமாக ஓடக்கூடிய முயலின் எடை 2 கிலோவிலிருந்து 6 கிலோ வரை இருக்கும். இதன் இதயம் நிமிடத்துக்கு 180 முதல் 300 வரை துடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT