Published : 31 Dec 2014 01:05 PM
Last Updated : 31 Dec 2014 01:05 PM

தலையில் லப்டப்!

# வீட்டில் அதிகம் தூசி படிவதற்கு வெளிப்புறத் தூசிகள் மட்டும் காரணமல்ல. நம் தோலில் உள்ள இறந்த செல்களும் காரணம்.

# கரப்பான்பூச்சியின் தலையை வெட்டினால்கூட 9 நாட்கள் வரை உயிருடன் வாழும்.

# பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் கீழ் தாடை இறங்கிதான் வாய் திறக்கும். ஆனால் முதலைக்கு மட்டும்தான் மேல் தாடை தூக்கி வாய் திறக்கும்.

# கம்ப்யூட்டரின் கீ போர்ட்டின் முதல் வரிசையில் உள்ள பட்டனில் ஒரே வரிசையில் typewriter என்ற வார்த்தையை டைப் செய்யலாம்.

# குழந்தையாக இருந்து வளர வளர நம் கண்கள் மட்டும் வளராமல் அப்படியே இருக்கும். மற்ற உறுப்புகள் வளர்ச்சியடையும்.

# உலகிலேயே மிகப்பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளை அதன் கண்ணைவிட மிகச் சிறியது.

# ஆங்கில மொழிக் கவிதைகளில் (Rhymes) மாதம், ஆரஞ்சு, ஊதா, சில்வர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவே மாட்டார்கள்.

# பட்டாம்பூச்சிகள் செடிகளில் உள்ள தேனைத் தன் வாயால் சுவைப்பதில்லை. தன் கால்களால்தான் தேனைச் சுவைக்கிறது.

# இறாலுக்கு அதன் தலையில்தான் இதயம் இருக்கிறது.

# வீட்டில் வளர்க்கப்படும் தங்க மீன்கள் கர்ப்பமாக இருந்தால் எப்படி அழைப்பார்கள் தெரியுமா? ‘ட்வீட்’ என்றே அழைப்பார்கள்.

- தொகுப்பு: சிவரஞ்சனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x