Published : 03 Dec 2014 01:16 PM
Last Updated : 03 Dec 2014 01:16 PM
கம்ப்யூட்டரில் விளையாட ரொம்பப் பிடிக்கும் இல்லையா? வீட்டிலேயே ஒரு குட்டி கம்யூட்டரை செய்து பார்ப்போமா? நீங்கள் தயாரா?
தேவையான பொருள்கள்:
# தடிமனான வெள்ளை நிறக் காகிதம்
# கறுப்பு நிற அட்டை
# கார்ட்போர்டு அட்டை சிறியது
# தீப்பெட்டி
# நீளம் குறைந்த ஒயர் துண்டு ஒன்று
# சிறிய பிளாஸ்டிக் கப் ஒன்று
# ஸ்கெட்ச் பேனா
# பசை
# கத்தரிக்கோல்
# செல்லோ டேப்
செய்முறை:
1. தடிமனான கார்ட்போர்டிலிருந்து ஒரு செவ்வக வடிவ அட்டையை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பரப்பு முழுவதும் வெள்ளை நிறக் காகிதத்தை ஒட்டிவிடுங்கள். இந்த அட்டை மீது, கறுப்பு நிற அட்டையிலிருந்து செவ்வக வடிவத்தை வெட்டி எடுத்துச் சுற்றிலும் சிறிய பகுதியை விட்டுவிட்டு ஒட்டுங்கள். இது தான் கம்ப்யூட்டரின் திரை.
2. படத்தில் காட்டியபடி கார்ட்போர்டு உதவியுடன் ஒரு ஸ்டாண்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் மீது கம்யூட்டரின் திரையை செல்லோ டேப் கொண்டு ஒட்டிப் பொருத்துங்கள்.
3. தீப்பெட்டியைச் சுற்றி வெள்ளை நிறக் காகிதத்தை ஒட்டி அதை கம்ப்யூட்டரின் சி.பி.யூ. போல மாற்றிக் கொள்ளுங்கள்.
4. அதேபோல், கார்ட்போர்டில் இருந்து செவ்வக வடிவத்தை வெட்டி எடுத்து அதன் மீது வெள்ளை நிறக் காகிதத்தை ஒட்டிக்கொள்ளுங்கள். இதில் எழுத்துகளையும் எண்களையும் அடையாளங்களையும் எழுதி அதை கீபோர்டு ஆக்கிக் கொள்ளுங்கள்.
5 . பிளாஸ்டிக் கப் உதவியுடன் ஒரு மவுஸை உருவாக்குங்கள். அதில் சிறு துளையிட்டு பிளாஸ்டிக் ஒயரின் ஒரு முனையை அதில் நுழைத்துக் கொள்ளுங்கள். மறுமுனையை சிபியூவின் பின்பகுதியில் செருகிவிடுங்கள். இப்போது உங்களுக்கான குட்டி கம்ப்யூட்டர் தயார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT