Published : 09 Oct 2013 04:28 PM
Last Updated : 09 Oct 2013 04:28 PM
கப்பல் என்றாலே பிரம்மாண்டம்தான். அதிலும் உலக மகா பிரம்மாண்ட கப்பல் எது தெரியுமா? ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ். ஃபின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2009ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆச்சரியம் தருகின்றன.
#எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்.
#கப்பலுக்குள் 150 மைல் நீளத்திற்கு பைப்புகளை பயன்படுத்தியுள்ளனர்.
#கப்பலில் பயன்படுத்தப்பட்ட மின் ஒயர்களின் நீளம் 3 ஆயிரத்து 300 மைல்.
#ஒரே சமயத்தில் இந்தக் கப்பலில் 6,300 பேர் பயணிக்க முடியும்.
#பதினாறு மாடிகள் கொண்ட இதில் 2 ஆயிரத்து 700 அறைகள் உள்ளன.
#கப்பலுக்குள் 7 சிறிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளி அரங்கமும் உண்டு.
#11 விடுதிகளும் 7 நீச்சல் குளங்களும் உள்ளன.
#குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், கைப்பந்து, கோல்ஃப் மைதானங்களும் இருக்கின்றன.
இது கப்பலா இல்லை கடலான்னு ஆச்சரியமா இருக்குதானே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT