Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM
சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும்.
#சிறுத்தைகள் வழுவழுப்பான, தங்க நிற மயிர்ப் போர்வையையும், அதன் மீது கறுப்புத் திட்டுகளையும் கொண்டவை.
#ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல். ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது.
#சிறுத்தையின் உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும். வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்ற சமநிலையை வால் தருகிறது.
#வளர்ந்த சிறுத்தைகள் தனியாக வாழக்கூடியவை. ஒவ்வொரு சிறுத்தையும் காட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்னொரு சிறுத்தை அந்த இடத்துக்குள் வருவதை விரும்பாது.
#சிறுத்தைகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் பெரும்பாலும் இரை தேடும்.
#வேட்டையாடிய விலங்கைச் சிறுத்தைகள் உயரமான மரத்தில் இழுத்துக்கொண்டு ஏறும். மற்ற விலங்குகள் உணவை உண்ணாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தனது
இரையை இரண்டு, மூன்று நாட்கள்
வைத்திருந்து உண்ணும். உணவு
தீர்ந்த பிறகுதான் சிறுத்தைகள் மரத்திலிருந்து இறங்கும்.
# பெண் சிறுத்தைகள் ஒரே நேரத்தில்
இரண்டு அல்லது மூன்று குட்டிகளை இடும். குட்டிக்கு இரண்டு வயதாகும்போது அது தனித்துவிடப்படும்.
# பெண் சிறுத்தை ஆண் இணையை ஈர்ப் பதற்குத் தனது உடல் மணத்தைத் தெரியப்படுத்த மரங்களில் உரசி, மணத்தை விட்டுச்செல்லும்.
# சிறுத்தையின் மீசை ரோமமும் எலும்புகளும் மருத்துவக் குணம் கொண்டவை என்ற நம்பிக்கை உள்ளது. அவற்றின் ரோமம், உடல் பாகங்களுக்காக ஆண்டுதோறும் நிறைய சிறுத்தைகள் உலகெங்கும் கொல்லப்படுகின்றன. அதனால் அருகிவரும் விலங்குகளில் ஒன்றாகச் சிறுத்தை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT