Published : 26 Mar 2014 01:44 PM
Last Updated : 26 Mar 2014 01:44 PM
# வரிக்குதிரை, குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
# ஒவ்வொரு வரிக்குதிரையும் தனித்துவமான கருப்பு வெள்ளை வரி வடிவங்களைக் கொண்டது.
# வரிக்குதிரையின் தனித்துவ வரிவடிவமைப்பைப் புரிந்துகொள்ள நிறைய விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றின் வரிகள் கண்களை ஏமாற்றும் தன்மையுடையவை. புல்லுக்குள் மறைந்திருக்கும்போது அதன் கோடுகள் அவற்றை இனம் கண்டுகொள்ளாதவாறு மறைத்துவிடும்.
# ஆப்பிரிக்காவில்தான் வரிக்குதிரைகள் வசிக்கின்றன.
# சமதளத்தில் வாழும் வரிக்குதிரைகளின் வால் அரை மீட்டர் நீளம் இருக்கும்.
# பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போடப்படும் கருப்பு-வெள்ளைத் தடங்கள் ‘ஜீப்ரா கிராசிங்’ என்று அழைக்கப்படுகின்றன.
# வரிக்குதிரையை வேட்டையாடப் புலியோ, சிங்கமோ துரத்தும்போது அது குறுக்கும் நெடுக்குமாக ஓடித், தப்பிக்க முயலும்.
# வரிக்குதிரைகளுக்குக் கூர்மையான பார்வை, செவித்திறன் உண்டு.
# வரிக்குதிரை நின்றுகொண்டே தூங்கும் இயல்புடையது.
# வரிக்குதிரை புல் மட்டுமே சாப்பிடும்.
# வரிக்குதிரையின் காதுகளை வைத்து அதன் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும்.
# வரிக்குதிரைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. வரிக்குதிரை கூட்டம் ‘ஹேரம்’ என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு ஆண் வரிக்குதிரையும் ஆறு பெண் குதிரைகளும் இருக்கும்.
# வேட்டையாடும் விலங்கு அருகில் வந்தால் கூட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு வரிக்குதிரை மற்றதை எச்சரிக்கை செய்யும். சகாக்களை எச்சரிக்க அவை குரைக்கும்.
# மார்ட்டி என்ற பெயருடைய வரிக்குதிரை மடகாஸ்கர் திரைப்படத்தில் நடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT