Published : 03 May 2017 11:22 AM
Last Updated : 03 May 2017 11:22 AM
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி எல்லா நாடுகளிலும் உலகக் கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் ரொனால்டு ராஸ் 1897-ம் ஆண்டு செய்த முக்கியமான கண்டுபிடிப்பைக் குறிக்கவே இது கொண்டாடப்படுகிறது. பெண்ணின அனாஃபிலஸ் கொசுக்கள்தான், மனிதர்களுக்கு மலேரியா ஒட்டுண்ணிகளைப் பரப்புகின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவானது 20 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கிறது. அத்துடன், 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனால் உயிரிழக்கின்றனர். மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களாலேயே ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்றால், மலேரியா கொசு இரவில் கடிக்கும். எனவே கொசு வலைகள் கொசுக்கடியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆனால், டெங்கு கொசு பட்டப்பகலில் நாம் விழித்திருக்கும்போதே கடிக்கும். இந்தக் கொசுக்களிடமிருந்து தப்பிக்கவும், தவிர்க்கவும் ஒரு வழி உண்டு.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் இதற்கான வழி. வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குட்டைகள், தொட்டிகளின் கீழேயிருக்கும் வாளிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் தண்ணீரைத் தேங்க விடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட இடங்கள்தான் கொசுக்களுக்கு விருப்பமானவை. இப்படிப்பட்ட தண்ணீரை அகற்றிவிட்டாலே கொசு உற்பத்தியைப் பெருமளவு தடுக்கமுடியும்.
- தகவல் திரட்டியவர்: வ. சுவர்ணாஞ்சலி, ஆறாம் வகுப்பு,
செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT