Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம்

விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.

இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும் அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதால்தான். நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல, ஒரு தட்டு அளவுக்கு மலர்கள் அமைந்திருக்கும். இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள். இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து வருகிறார்கள். இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம் இது கள்ளி வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி வகை அல்ல.

இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum. ஆங்கிலப் பெயர்கள்: Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman's Pipe.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x