Published : 08 Jun 2016 12:54 PM
Last Updated : 08 Jun 2016 12:54 PM

வேடிக்கை விலங்குகள்!

மனிதர்களைப் போலவே சில உயிரினங்களும் வேடிக்கையான விஷயங்களைச் செய்யும். அதுபற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

# ஒட்டகங்கள் மிக வேகமாக எச்சிலைத் துப்பிவிடும். ஒருமுறை எச்சில் துப்பும்போது 200 கிராம் எச்சில் வெளிவரும்.

# நீரில் படுத்திருக்கும் ஆண் நீர் யானை எழுந்து நின்றால், அருகில் இருக்கும் பெண் நீர் யானையும் உடனே எழுந்து நின்றுவிடும் பழக்கம் கொண்டது.

# ஒரு பூனையால் 100 விதமான ஒலிகளை எழுப்ப முடியும். ஆனால், நாயால் 10 வித ஒலிகளை மட்டுமே எழுப்ப முடியும்.

# டால்பின்கள் ஒரு கண்ணை மூடிக்கொண்டே தூங்கும். இரண்டு கண்களை மூடிக்கொண்டு அவை எப்போதுமே தூங்காது.

# துரத்தும்போது கங்காருகள் 10 அடி உயரம் வரை எழும்பி, 30 அடி நீளத்துக்குத் தாவும்.

# நத்தைக்கு அபூர்வமான ஒரு திறமை உண்டு. அது தன்னுடைய இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் வந்த வழியை மறக்காது. திரும்பவும் எப்படியாவது இருப்பிடத்துக்கு வந்துவிடும்.

# யானையின் மீது உட்கார்ந்து தொந்தரவு செய்யும் ஈ, கொசுக்களை யானை எப்படிச் சாகடிக்கும் தெரியுமா? ஈ, கொசுக்கள் யானையின் மீது உட்கார்ந்தவுடன் அது தன் தோலைச் சுருக்கும். அப்போது தோலின் மடிப்புகளில் மாட்டி அவை இறந்துவிடும்.

# பூனை நாக்கால் தன் உடலைச் சுத்தம் செய்வதுபோலச் சுண்டெலியும் சுத்தம் செய்துகொள்ளும். இது நிமிடத்துக்கு 3 முறை நாக்கால் தன் உடலைச் சுத்தம் செய்யும்.

# திமிங்கிலம் சத்தம் எழுப்பும்போது அந்தச் சத்தம் 188 டெசிபல்கள் வரை இருக்கும். விமானம் கிளம்பும்போது எழும் ஒலியைப் போல் ஒன்றரை மடங்கு அதிகம். இந்தச் சத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திலும் கேட்கும்.

# நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய பாலூட்டி இனமான பிளாடிபஸ், தனது எடைக்குச் சமமான உணவைத் தினமும் சாப்பிடும்.

தகவல் திரட்டியவர்: ஏ. அப்துல் ரஹீம், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, துவரங்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x