Published : 20 Sep 2013 05:46 PM
Last Updated : 20 Sep 2013 05:46 PM
அந்த நாள் ஞாபகம் 1613
சூரியனை பூமி சுற்றுகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவை மதகுருக்கள் விசாரித்த நாள். சூரியனை பூமி சுற்றுகிறது என்று இன்று சொல்லி விடுவீர்கள். ஆனால் இன்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னால் அதை சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ சாகும்வரை சிறையில் தள்ளப்பட்டார். இதே நாளில்தான் 1613ல் அவர் கத்தோலிக்க மத குருக்களால் விசாரிக்கப்பட்டார்.
கலிலியோ இத்தாலியின் பைசா நகரில் பிறந்தவர். பைசா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானவர். பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று முதலில் சொன்னவர். நவீன அறிவியலின் தந்தை என்று பெயர் வாங்கும் அளவிற்கு கணிதம், வானவியல், தத்துவஞானம் என பல்துறைகளில் சாதனைகள் நிகழ்த்தியவர். அவரது காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த அரிஸ்டாட்டிலின் பல அறிவியல் கருத்துகளை தவறு என நிரூபித்தவர்.
அவரது பல புத்தகங்களில் `விவாதம்` எனும் நூல் முக்கியமானது ஆகும்.அதில் சூரியன்தான் மையமாக உள்ளது. அதனையே பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றுகின்றன என்ற கருத்து இருந்தது. அந்த கருத்தால் கத்தோலிக்க மதக்குருக்கள் கோபமடைந்தனர். அதன் மீது பலகட்ட விசாரணைகள் நடந்தன.ஒரு முறை கலிலியோ மன்னிப்பும் கேட்டார். போப் ஆண்டவர் அளவில் அவருக்கு தெரிந்த மதகுருக்கள் இருந்தாலும் அவர் 1633 ஜூனில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். 1642 ஜனவரி 8-ல் தனது 77வது வயதில் இறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT