Published : 17 Aug 2016 12:37 PM
Last Updated : 17 Aug 2016 12:37 PM

நம்ப முடிகிறதா?- ஓட்டப் பந்தயத்துக்குப் பெருமை!

ஸ்கேட்டிங் விளையாட்டில் வீரர்கள் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தை அடைகிறார்கள்.

# ஓட்டப் பந்தயம் மட்டுமே ஒலிம்பிக்கில் முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு விளையாட்டு!

# ராக்கெட் பயன்படுத்தி ஆடும் விளையாட்டுகளில் பேட்மிட்டனே மிக வேகமானது. மணிக்கு 200 மைல்!

# புராதன ஒலிம்பிக்ஸில் பெண்கள் பங்கேற்க மட்டுமல்ல... பார்வையாளர்களாகவும் அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் நிர்வாணமாகப் போட்டியில் பங்கேற்றதே காரணம்!

# இங்கிலாந்தில் வசதி படைத்தோர் இரவு உணவுக்குப் பிறகு ஆடக்கூடிய விளையாட்டாக 1880-களில் டேபிள் டென்னிஸ் அறிமுகமானது.

# இரண்டு ஒலிம்பிக் போட்டி களுக்கு இடையேயான 4 ஆண்டு இடைவெளிக்கும் ‘ஒலிம்பியாட்’ என்று பெயர்.

# மடகாஸ்கரில் காணப்படும் 80 சதவீத தாவர, விலங்கு இனங்களை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது.

# மக்கள்தொகையிலும் நிலப் பரப்பிலும் ஆசியாவிலேயே சிறிய நாடு மாலத்தீவு.

# மங்கோலியாவுக்கு அடுத்து, உலகில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட இரண்டாவது நாடு நமீபியா.

# உலகின் சிறிய நாடுகளில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது மால்டா.

# அணுசக்தி தயாரித்த முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x