Last Updated : 08 Mar, 2017 11:29 AM

 

Published : 08 Mar 2017 11:29 AM
Last Updated : 08 Mar 2017 11:29 AM

நீங்களே செய்யலாம்: அட்டைத் தொப்பி

வெயில் காலம் தொடங்கிவிட்டது. வெளியே செல்லும்போது தலையில் தொப்பி வைத்துக்கொண்டு போனால் நன்றாக இருக்கும் இல்லையா? அந்தத் தொப்பியை நீங்களே செய்ததாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? தொப்பி செய்ய நீங்கள் தயாரா?

தேவையான பொருள்:

# அட்டைக் காகிதம் (சார்ட் பேப்பர்)

# பென்சில்

# பசை

# கத்தரிக்கோல்

எப்படிச் செய்வது?

# ஒரு அட்டைக் காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காகிதத்தில் இரண்டு வட்டம் வரைந்துகொள்ளுங்கள். அதை அப்படியே வெட்டிக்கொள்ளுங்கள்.

# வெட்டி எடுத்த ஒன்றில் படத்தில் காட்டியதைப் போல உட்புறமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

# பிறகு செவ்வக வடிவில் காகிதத்தை வெட்டுங்கள்.

# செவ்வக வடிவில் இருக்கும் காகிதத்தின் ஒரு முனையில் பசையால் தடவி, அதை இன்னொரு முனையோடு ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது அது ஒரு சிறு உருளை போலத் தெரிகிறதா? அதுதான் தொப்பியின் உள்பாகம்.

# உள்வட்டமாக வரைந்து ஒரு பகுதியை வெட்டி எடுத்தீர்கள் அல்லவா? அதை இப்போது உருளையின் ஒரு பக்கத்தில் பசையைக் கொண்டு ஒட்டுங்கள். இதுதான் தொப்பியின் கீழ்ப் பகுதி.

# இதேபோல வட்டமாக வெட்டி எடுத்த இன்னொரு அட்டையை உருளையின் மேல்புறம் ஒட்டுங்கள். ஒட்டிய பகுதியைத் தாண்டிக் கூடுதலாக இருக்கும் அட்டைப் பகுதியைக் கத்தரிக்கோலால் வெட்டிவிடுங்கள். இப்போது தொப்பி தயார்.

# தொப்பியை அழகுபடுத்த வேண்டுமென்றால், தொப்பியைச் சுற்றி ரிப்பனைச் சுற்றி முடிச்சுப்போடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x