Published : 01 Feb 2017 10:28 AM
Last Updated : 01 Feb 2017 10:28 AM
# இந்தியாவில் உள்ள லட்சத் தீவுக்கு லட்சக்கணக்கில் உள்ள தீவு என்று அர்த்தம். ஆனால், இருப்பதோ 36 தீவுகள்தான். அதிலும் மக்கள் 10 தீவுகளில்தான் வசிக்கிறார்கள். கடலுக்கடியில் நீளும் சாக்கோஸ்லக்காதீவ் மலைத்தொடரின் வெளியே தெரியும் மலையின் உச்சிப் பகுதிகளே இந்தத் தீவுகள்.
# உலகில் உள்ள அழகான தீவுகளில் மொரிஷியஸ் தீவும் ஒன்று. இது ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் பக்கத்தில் உள்ளது. இந்தத் தீவின் நீளம் மொத்த நீளமே 65 கி.மீ.தான். அகலம் 45 கி.மீ.. மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.
# இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஜெர்ஸி என்ற தீவு உள்ளது. ஜெர்ஸி பசு, ஜெர்ஸி துணி போன்றவை இந்தப் பெயராலேயே அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
# கிழக்கு கரீபியக் கடலில் பிரிட்டனுக்குச் சொந்தமாக 60 தீவுக் கூட்டங்கள் உள்ளன. இவற்றை ‘வெர்ஜின் தீவுகள்’ என அழைக்கிறார்கள். இதில் மிகப் பெரியது டார்டோலா தீவு.
# வெர்ஜின் தீவுகளில் சில தீவுகள் தனியாருக்குச் சொந்தமானவை. ரிச்சர்ட் பிரான்சன் என்பவருக்கு மாஸ்லுய்டோ, நெக்கர் என இரண்டு தீவுகள் சொந்தம். இங்கு வரிச் சலுகைகள் அதிகம் என்பதால் பணக்காரர்கள் இங்கே போட்டிபோட்டுக்கொண்டு தீவுகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
தகவல் திரட்டியவர்: கே. லோகேஷ், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பர்கூர், தருமபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT