Published : 17 May 2017 10:27 AM
Last Updated : 17 May 2017 10:27 AM
எளிமையான ஒரு குட்டி மேஜிக்கை உங்கள் நண்பர்களுக்குச் செய்து காட்டுகிறீர்களா?
தேவையான பொருட்கள்:
ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய தீப்பெட்டி, பழைய ஒரு ரூபாய் நாணயம்.
எப்படிச் செய்வது?
# மேஜிக்கைச் செய்துகாட்டுவதற்கு முன்பு, நீங்கள் முன்தயாரிப்பு ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும்.
# தீக்குச்சிகளுடன் கூடிய தீப்பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அடிப்பாகப் படத்தில் காட்டியது போல, தீப்பெட்டியில் பழைய ஒரு ரூபாய் நாணயத்தை வெளியில் தெரியாதபடி செருகுங்கள்.
# இப்போது உங்கள் நண்பர்களிடம், “இது ஒரு மந்திரத் தீப்பெட்டி. இதை மேல் நோக்கிச் சுண்டிவிட்டால் கீழே வந்து விழும்போது எப்போதும் மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் தரையில் விழும்’ என்று சொல்லுங்கள்.
# அதெப்படி என்று உங்கள் நண்பர்கள் கேள்வி கேட்பார்கள். அது ரகசியம் என்று சொல்லிவிட்டு, சுண்டி விடுங்கள். தீப்பெட்டி மேல் பக்க லேபிள் தெரியும்படி விழும்.
# அதைப் போலவே மீண்டும் மீண்டும் சுண்டிவிடுங்கள். எத்தனை முறை சுண்டிவிட்டாலும் தரையில் விழும்போது மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் விழும். இதைக் கண்டு உங்கள் நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போவார்கள்.
மேஜிக் ரகசியம்:
தீப்பெட்டிக்குள் செருகி வைத்த நாணயத்தின் பளு காரணமாக, நீங்கள் சுண்டிவிடும்போது எப்போதும் மேல் பக்க லேபிள் தெரியும்படி கீழே வந்துவிழுகிறது.
உங்கள் நண்பர்களிடம் இந்த மேஜிக்கைச் செய்துகாட்டு முன் தனியாக ஓரிரு முறை செய்துபாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT